ஆயுள் காப்பீட்டுடன் வருகிறது ஏர்டெல்லின் ரூ.179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்! 

ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் ப்ளானில் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 SMS செய்திகளுடன் அன்லிமிடெட் குரல் அழைப்பு அடங்கும்.

ஆயுள் காப்பீட்டுடன் வருகிறது ஏர்டெல்லின் ரூ.179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்! 

கால காப்பீட்டு சலுகைகளை வழங்க ஏர்டெல் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் உடனான தனது கூட்டணியை புதுப்பித்துள்ளது

ஹைலைட்ஸ்
  • ரூ.179 ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ளான் Wynk Music அணுகலை வழங்குகிறது
  • 18 முதல் 54 வயது வரையிலான வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்பீட்டைப் பெறலாம்
  • ஏர்டெல், ரூ.279 ப்ரீபெய்ட் ப்ளானுக்கும் ஆயுள் காப்பீட்டை கொண்டுவந்துள்ளது
விளம்பரம்

ஏர்டெல், இரண்டு லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் ரூ. 179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது. தொகுக்கப்பட்ட காப்பீட்டு சலுகையை நுகர்வோருக்கு வழங்க பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் (Bharti AXA Life Insurance) நிறுவனத்துடன் டெல்கோ கூட்டு சேர்ந்துள்ளது. ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானுடன், ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குவது முதல் முறை அல்ல. புது தில்லியைச் சேர்ந்த ஆபரேட்டர், இந்த மாத தொடக்கத்தில், HDFC Life-ல் இருந்து 4 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன் ரூ. 279 ப்ரீபெய்ட் ப்ளானைக் கொண்டுவந்தார். அந்த ப்ளானில், ஷா அகாடமியிலிருந்து (Shaw Academy) நான்கு வார பாடநெறிக்கான அணுகலும் அடங்கும்.

ரூ. 179 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 SMS செய்திகளுடன் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் குரல் அழைப்பைக் கொண்டுவருகிறது. Hooq, Zee5 போன்ற தளங்களில் இருந்து 370-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து உள்ளடக்கத்தைப் பார்க்கும் திறனுடன் Wynk Music மற்றும் Airtel Xstream App Premium அணுகல் போன்ற கூடுதல் பலன்களும் இதில் அடங்கும்.

இருப்பினும், ரூ. 179 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் போட்டியில் இருந்து வேறுபட்டது. Bharti AXA Life-ல் இருந்து 2 இரண்டு லட்சம் கால ஆயுள் காப்பீடு வரும். 18 முதல் 54 வயதுக்குட்பட்ட, ரூ. 179 ப்ரீபெய்ட் ப்ளான் ரீசார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், காப்பீடு வழங்கப்படும் . இதற்கு கூடுதல் கடிதங்கள் அல்லது மருத்துவ பரிசோதனை தேவையில்லை மற்றும் பாலிசி அல்லது காப்பீட்டு சான்றிதழ் உடனடியாக டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என்று ஆபரேட்டர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் காப்பீட்டின் physical copy-யின் நகலையும் கேட்கலாம்.

காப்பீட்டு செயல்முறை எந்த ஏர்டெல் சில்லறை விற்பனையகத்திலும் அல்லது Airtel Thanks செயலியின் மூலமாகவும் டிஜிட்டல் முறையில் நிறைவேற்றப்படும். மேலும், ரூ. 179 ப்ரீபெய்ட் ப்ளான், நுழைவு நிலை ஸ்மார்ட்போன் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது மற்றும் நகர்ப்புற & கிராமப்புற சந்தைகளில் போன் பயனர்களைக் கொண்டுள்ளது.

"பாரதி ஏர்டெலுடன் கூட்டு சேர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு பொறுப்பான ஆயுள் காப்பீட்டாளராக, வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்க நாங்கள் எப்போதும் பார்க்கிறோம், ”என்று பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் (Bharti AXA Life Insurance) நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விகாஸ் சேத் (Vikas Seth) கூட்டு அறிக்கையில் தெரிவித்தார். "எங்கள் கூட்டாண்மை, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு ரீசார்ஜ் மூலம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை உறுதிசெய்கிறது மற்றும் அதன் பலன்களை பயன்படுத்த அவர்களுக்கு உதவுகிறது. இந்த கூட்டணி, நாட்டில் காப்பீட்டு ஊடுருவலை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ”

கடந்த ஆண்டு மே மாதத்தில், ஏர்டெல், Bharti AXA மற்றும் HDFC Life நிறுவனத்திடமிருந்து 4 லட்சம் ஆயுள் காப்பீட்டுடன் ரூ. 129 மற்றும் ரூ. 249 ப்ரீபெய்ட் ப்ளான்களை அறிமுகப்படுத்தியது. இது, கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ. 599 ப்ரீபெய்ட் ப்ளானுடன் ஒரே மாதிரியான ஆயுள் காப்பீட்டுத் தொகையை விரிவுபடுத்தியது. இருப்பினும், ஆபரேட்டர், சமீபத்தில் முந்தைய ப்லான்களை நிராகரித்து, ஒட்டுமொத்த காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான, புதிய ஆப்ஷனாக ரூ. 279 ப்ரீபெய்ட் ப்ளானைக் கொண்டுவந்தது.

"எங்கள் புதுமையான ப்ரீபெய்ட் அம்சங்களுக்கு உள்ளமைக்கப்பட்ட கால காப்பீட்டுத் ப்ளான்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெற்றுள்ளன. மேலும், இது தீர்வை இன்னும் ஆழமாக மக்களிடம் கொண்டு செல்ல ஊக்குவித்தது. ஏர்டெல்லின் உலகத் தரம் வாய்ந்த நெட்வொர்க்கில் இணைந்திருக்கும்போது, ​​தங்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நிதி ரீதியாகப் பாதுகாக்க, நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களுக்கு எளிய மற்றும் அணுகக்கூடிய தளங்களில் ஒன்றை, ரூ. 179 ரீசார்ஜ் வழங்கும்” என்று பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி சஷ்வத் சர்மா (Shashwat Sharma) தெரிவித்தார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. DSLR-க்கு டஃப் கொடுக்க Vivo ரெடி! Zeiss-உடன் கைகோத்து Vivo X300 சீரிஸ் இந்தியாவிற்கு வருது
  2. OnePlus-ன் கேமிங் ராட்சசன் வந்துட்டான்! 7,800mAh பேட்டரி பவர்! 165Hz டிஸ்ப்ளே! OnePlus Ace 6-ன் அம்சங்கள் என்னென்ன?
  3. ஒன்பிளஸ் 15 வந்துவிட்டது! பேட்டரி வேற லெவல்! 7300mAh பேட்டரி பவர் விலையும், ஸ்பெக்ஸ்ஸும் பார்க்கலாமா?
  4. கேமராவில் புரட்சி! 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் உடன் Xiaomi 17 Ultra வரப்போகுது
  5. அல்ட்ரா-ஸ்லிம் செக்மென்ட்டில் Motorola-வின் புதிய ஆட்டம்! Moto X70 Air இந்திய லான்ச் டீஸ் ஆகி இருக்கு! விலை ₹30,000-க்குள் இருக்குமா?
  6. சின்ன ஃபோன் பிரியர்களுக்கு Vivo-வின் சர்ப்ரைஸ்! Vivo S50 Pro Mini-இல் Dimensity 9400 சிப்செட்
  7. HMD-ன் அடுத்த மாடுலர் ஃபோன் ரெடி! கேமிங், வயர்லெஸ் சார்ஜிங் என ஒன்பது புது Smart Outfits! HMD Fusion 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
  8. Nothing ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! Nothing Phone 3a Lite இன்று மாலை அறிமுகம்! மலிவு விலையில் Glyph லைட் வருதா?
  9. iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!
  10. OnePlus ரசிகர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 15, Ace 6 விலை லீக்! ரூ. 53,100 ஆரம்ப விலையில் 7300mAh பேட்டரி போனா?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »