வேடாஃபோன் ஐடியா நிறுவனம் நேற்றைய தினம் தனது ப்ரீபெய்ட் பிளான் கட்டணங்களை உயர்த்தி அறிவித்ததை தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் இன்று தனது திருத்தப்பட்ட கட்டண விவரங்களை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது நாளை முதல் (டிச.3) அமலுக்கு வருகிறது. இந்த புதிய பிளான் கட்டணமானது ரூ.19 முதல் ரூ.2,398 வரை உள்ளது.
வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் கட்டண உயர்வை தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோவும் தனது ப்ளான் கட்டணத்தை உயர்த்துகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது ப்ளான் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
உயர்த்தபட்ட ப்ரீபெய்ட் பிளான் கட்டணமானது ஒரு நாளைக்கு 50 பைசா முதல் ரூ.2.85 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம் போல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் Airtel thanks மற்றும் Wynk Music உள்ளிட்ட எந்த சேவைகளிலும் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல்-ன் பிரபலமான அன்லிமிடெட் ப்ரீபெய்ட் பிளான்களான, ரூ.129, ரூ.169, ரூ.249 மற்றும் ரூ.448 உள்ளிட்டவையின் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன. அதேபோல், நீண்ட கால பிளான்களான ரூ.998 மற்றும் ரூ.1,699 பிளான்களிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட பிளான் கட்டணமானது ரூ.19 முதல் தொடங்குகிறது. இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 150mb டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதே பிளானில் இதுவரை 200mb டேட்டா வழங்கப்பட்டு வந்தது.
இதேபோல், ரூ.129க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் ஒரு நாளுக்கு, 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகைகளுடன் 28 நாட்களுக்கு கிடைத்த இந்த பிளான் இனு ரூ.148க்கு கிடைக்கும். இதேபோல், 249க்கு கிடைத்த பிளான் சலுகைகள் இனி ரூ.298க்கு கிடைக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ப்ளான் விலை (Rs.) | பழைய ப்ளான் வேலிடிட்டி (in days) | பழைய திட்ட பலன்கள் | புதிய ப்ளான் விலை (Rs.) | புதிய ப்ளான் வேலிடிட்டி (in days) | புதிய திட்ட பலன்கள் |
---|---|---|---|---|---|
19 | 2 | Unlimited Calling, 200MB Data | 19 | 2 | Unlimited Calling, 100 SMS, 150MB Data |
35 | 28 | Rs. 26.66 Talktime, 100MB Data | 49 | 28 | Rs. 38.52 Talktime, 100MB Data |
65 | 28 | Rs. 130 Talktime, 200MB Data | 79 | 28 | Rs. 63.95 Talktime, 200MB Data |
129 | 28 | Unlimited Calling, 300 SMS Messages, 2GB Data | 148 | 28 | Unlimited Calling, 300 SMS Messages, 2GB Data |
169 or 199 | 28 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1 GB/ Day | 248 | 28 | Unlimited Calling, 100 SMS/ Day, 1.5GB/ Day |
249 | 28 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 2GB/ Day | 298 | 28 | Unlimited Calling, 100 SMS/ Day, 2GB/ Day |
448 | 82 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day | 598 | 84 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day |
499 | 82 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 2GB/ Day | 698 | 84 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 2GB/ Day |
998 | 336 | Unlimited Calling, 3600 SMS Messages, 12GB Data | 1498 | 365 | Unlimited Calling, 3600 SMS Messages, 24GB Data |
1699 | 365 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day | 2398 | 365 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day |
வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 2019 செப்டம்பர் மாத காலாண்டு இறுதியில் ரூ.74,000 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூட்டாக அறிவித்தன. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் இரண்டு நிறுவனங்களும் ப்ரீப்பெய்டு பிளான் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக அறிவித்தது.
முன்னதாக, நேற்றைய தினம் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் தனது மாற்றியமைக்கப்பட்ட கட்டண விவரங்களை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் இன்று அதன் திருத்தப்பட்ட கட்டண விவரங்களை அறிவித்துள்ளது.
தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது கட்டணங்களை 40 சதவீதம் அளவு உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும், அதன் திருத்தப்பட்ட விலை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்