Airtel ரூ.98 ப்ரீபெய்ட் பேக்கில் டபுள் டேட்டாவை அளிக்கிறது. முன்னதாக, இந்த ப்ளானில் 6 ஜிபி டேட்டா கிடைத்தது. இந்த முறை குருகிராமிலிருந்து வந்த நிறுவனம் 12 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இருப்பினும், இந்த ப்ளானின் மூலம் குரல் மற்றும் எஸ்எம்எஸ் பயன்படுத்த எந்த வசதியும் இல்லை. ரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானில் டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். நிறுவனம் ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 ரீசார்ஜ்களில் அதிக பேச்சு நேரத்தை வழங்குகிறது.
ரூ.101 ப்ரீபெய்ட் ப்ளானில், ஜியோ 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அந்த ப்ளானை வெல்ல ஏர்டெல் ரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானில் டபுள் டேட்டாவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜியோ ப்ளான் மற்ற நெட்வொர்க்குகளில் 1000 நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.
முன்பு ரூ.500 ரீசார்ஜில் ரூ.423.73 டாக் டைம் கிடைத்தது. இந்த முறை ரூ.500 ரீசார்ஜ் மூலம் ரூ.480 டாக் டைம் கிடைக்கும். ரூ.1,000 ரீசார்ஜில் ரூ.960 டாக் டைம் மற்றும் ரூ.5,000 ரீசார்ஜில் ரூ.4,800 டாக் டைம் கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்