சமூக வலைதள கணக்குகளை பெண்களுக்கு வழங்கிய பிரதமர் மோடி!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 மார்ச் 2020 14:06 IST
ஹைலைட்ஸ்
  • பிரதமர் மோடி, சமூக ஊடக கணக்குகளின் கட்டுப்பாட்டை பெண்களுக்கு வழங்கினார்
  • இது சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் வகையில் செய்யப்பட்டது
  • அந்த பெண்களில் ஒரு ஊனமுற்ற ஆர்வலர் & நீர் பிரச்சாரகர் ஆகியோர் இருந்தனர்

Photo Credit: Sanjay Kanojia/ AFP


பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச பெண்கள் தினத்தை குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடக கணக்குகளை பெண்களின் கட்டுப்பாட்டிற்கு வழங்கினார். பிரதமர் மோடியின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து ட்வீட் செய்த பெண்களில், ஒரு ஊனமுற்ற ஆர்வலர் மற்றும் நீர் பிரச்சாரகர் ஒருவர் இருந்தார், அங்கு அவருக்கு பல மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர்களின் பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்குகளை மற்றும் பல நேர்மறையான பதில்களை தளங்களில் ஈர்த்தது.

ஆனால் சில உரிமை ஆர்வலர்கள் மோடியின் அரசாங்கம் பெருமளவில் பழமைவாத மற்றும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை மற்றும் பொருளாதார தீமைகளை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

"இது கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாகும், ஏனெனில் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் பதிலளிக்க முடியாது" என்று ஷப்னம் ஹாஷ்மி (Shabnam Hashmi) பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்தார்.

"பெண்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மோசமாகிவிட்டனர் (மோடி ஆட்சிக்கு வந்தபோது)."

சமூக ஊடகங்களில் உலகின் மிகப் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான மோடி, கடந்த திங்கட்கிழமை தனது கணக்குகளை "ஊக்கமளிக்கும்" பெண்களுக்கு வழங்குவதற்கான தனது திட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பு ஆஃப்லைனில் செல்ல நினைப்பதாகக் கூறினார்.

"இது மில்லியன் கணக்கானவர்களில் உந்துதலைப் பற்றவைக்க உதவும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார், #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்குடன் மக்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

ஆனால் அரசாங்கக் கணக்கிலிருந்து ட்வீட்டில் குறிக்கப்பட்ட இளம் காலநிலை ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம் (Licypriya Kangujam), தான் கொண்டாட விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

"அன்புள்ள @narendramodi Ji, நீங்கள் என் குரலைக் கேட்கப் போவதில்லை என்றால் தயவுசெய்து என்னைக் கொண்டாட வேண்டாம்" என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார்.

Advertisement

2012-ல் டெல்லி மாணவியை பஸ்ஸில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததில் இருந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2018-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 34,000 கற்பழிப்புகள் பதிவாகியுள்ளன, இந்த எண்ணிக்கை பனிப்பாறையின் நுனி மட்டுமே (அதாவது அந்த தரவுகளின் சிறு துருப்பு) என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Narendra Modi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  2. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  3. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  4. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
  5. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  6. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  7. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  8. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
  9. அதிர்ச்சி! Vivo X Fold 5 விலை ₹1.5 லட்சம்! X200 FE-ல் 6500mAh பேட்டரி - லீக் தகவல்கள் இதோ!
  10. Apple-ன் அடுத்த மாஸ்டர்பீஸ்: iPhone 17 Pro Max-ல் பேட்டரி புரட்சி! நீண்ட நேரம் யூஸ் பண்ணலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.