super blood wolf moon: சந்திர கிரகணத்தை ஏன் இப்படி அழைக்கிறார்கள் தெரியுமா…?

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 21 ஜனவரி 2019 16:35 IST
ஹைலைட்ஸ்
  • இந்நாளில் நிலா சிவப்பும் -ஆரஞ்சும் கலந்த அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும்
  • இந்த கிரகணத்தை ஆசியா மற்றும் இந்தியாவில் பார்க்க முடியாது.
  • சந்திர கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடிகள் ஏதுமின்றி பார்க்கலாம்.

Total Lunar Eclipse Today: ஏன் இந்த நிகழ்வை சூப்பர் ப்ளட் உஃல்ப் மூன் (super blood wolf moon) என்று அழைக்கிறார்கள்…?

‘சூப்பர் ப்ளட் மூன்' என்றழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் வானவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வானத்தை நோக்கி திருப்பியுள்ளது. 2019 ஆண்டு முழு சந்திர கிரகணம் இன்று தெரியும் என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு நெருக்கமான சுற்று வட்டப்பாதையில் சந்திரன் செல்வதால் இந்த கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகண நாளில் நிலா சிவப்பும் -ஆரஞ்சும் கலந்த அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். கெடுவாய்ப்பாக இந்த கிரகணத்தை  ஆசியா மற்றும் இந்தியாவில் பார்க்க முடியாது. 

சந்திர கிரகணம் நடக்கும் தேதி, நேரம் 

இந்த சந்திர கிரகணம் ஜனவரி 20-ம் தேதி ஞாயிறு மாலை 7.33 தொடங்கியது சந்திரகிரகணம் 8.41க்கு முழுமையடைந்தது.  21-ந்தேதி காலை 9.13 வரை நடக்கும். காலை 11.13 வரை சந்திர கிரகணம் முழுமையாக நீங்கும்  எனத்தெரிகிறது. இந்த சந்திர கிரகணம் உலகமெங்கும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சந்திரகிரகணத்தை எங்கெங்கு பார்க்கலாம்..? 

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, லண்டன், இர்லாந்து,கிரீன்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், ஃப்ரான்ஸ்,  நார்வே, ஐஸ்லாந்து ஆகிய இடங்களில் பார்க்கலாம். 

மேலும் ஹவாய், ஆப்பிரிக்க நாடுகள், பாதி ஐரோப்பா நாடுகள், ஆசியாவில் சில நாடுகளால் பார்க்க முடியும். 

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள், கொரியா பாகிஸ்தான் மற்றும் ஜப்பான், கிர்கிஸ்தான், மங்கோலியா, மற்றும் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தெரியாது. 

ஏன் இந்த நிகழ்வை சூப்பர் ப்ளட் உஃல்ப் மூன் (super blood wolf moon) என்று அழைக்கிறார்கள்…?  

Advertisement

வானியல் நிகழ்வான இது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது நிகழ்கிறது. சூரியன் வெளிச்சத்தை பூமி நடுவில் நின்று தடுப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு நிலவு நாளில் மட்டுமே சந்திர கிரகணம் நடக்கும். சந்திரன் அளவு மற்றும் வெளிச்சம் அதிகமாக இருக்கும்மென்பதால் இதை ‘சூப்பர் மூன்' என்று அழைக்கின்றனர். சந்திரன் பூமிக்கு நெருக்கமான சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருவதால் பெரியதாக தெரிகிறது. 

சூரிய ஒளியானது பூமியை கடந்து செல்லும்போது  வளிமண்டலத்தில்  நீள நிற ஒளிக்கதிர்களாக வே செல்லும். கிரகண நாளில் பூமியின் நிழலும்  படியும் போது சிவப்பு நிற ஒளிக்கதிர்களாக சந்திரனை நோக்கி செல்கின்றன. இதனால் தான் சந்திரன் சிவப்பாக நம் பார்வைக்குத் தெரிகிறது. இதனால் இதை ‘ப்ளட் மூன்' ‘இரத்த நிலா' எனக் குறிப்பிடுகின்றனர்.  

 

சூப்பர் ப்ளட் மூனை எப்படி பார்க்கலாம்..? 

Advertisement

சூரிய கிரகணம் போலின்றி சந்திர கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடிகள் ஏதுமின்றி இயல்பாகவே பார்க்கலாம். டெலஸ்கோப் வழியாக பார்த்தால் அது நிச்சயமாக நல்ல அனுபவமாக இருக்கும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Lunar Eclipse, Super Blood Wolf Moon, full moon, Wolf Moon, Blood Moon
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  2. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  3. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  4. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
  5. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  6. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  7. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  9. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  10. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.