மனிதன் பயணிக்கும் விண்கல தொழில்நுட்பம்... முழு முயற்சியில் இஸ்ரோ!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 8 ஜூலை 2018 15:37 IST

விண்வெளிக்கு மனிதனை ஏற்றிச்செல்ல்லும் விண்கலத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்ப உருவாக்க முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது என அவ்வமைப்பின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏரோஸ்பேஸ் என்ற நிகழ்ச்சியில், இஸ்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி கே. சிவன் கூறுகையில், “மிகவும் நுட்பமான சவால் நிறைந்த தொழில்நுட்பமான, மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் இந்தியாவின் கனவின் மீதான முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ''கடந்த வியாழக்கிழமை மனிதனை விண்வெளிக்கு ஏற்றிச் செல்லும் விண்கலம் ஏதேனும் அபாயத்தைச் சந்தித்தால் மனிதன் எப்படி அந்த அபாயத்தில் இருந்து மீள்வது என்பது தொடர்பாக ஒரு சோதனை விண் ஓட்டத்தை செய்து வெற்றி அடைந்தோம். இதற்குக் காரணமாக இருந்தது மிகவும் அதி தொழில்நுட்பம் வசதி பொருந்திய ஒரு பிரத்யேக மோட்டார் வடிவமைப்பால் தான்'' என்றும் இஸ்ரோவின் செயல்பாடுகள் குறித்து சிவன் தெரிவித்தார்.

”மனிதனை ஏற்றிச்செல்வதற்கான விண்கல தொழில்நுட்பம் சிறப்பாகவே சோதனை செய்யப்பட்டது. அபாய காலத்தில் காற்றியக்கவியல் தொழில்நுட்பம் மூலம் பாராஷூட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு அபாய நிலையில் இருக்கும் விண்கலத்திலிருந்து அதில் பயணிக்கும் மனிதன் தப்பிக்க முடியும்” என்றும் சிவன் தெரிவித்தார்.

மனிதன் அபாய காலத்தில் விண்கலத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை ஓட்டமே வெற்றி பெற்றது இஸ்ரோவின் சாதனையாகக் கருதப்படுகிறது. “நாங்கள் சோதனை முயற்சிக் காலத்தில் தான் இருக்கிறோம். இன்னும் நாங்கள் மேம்படுத்திக் கொள்ள நிறைய உள்ளது. இந்திய விமானப் படை உடனும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து எங்கள் திட்டத்தை மேலும் மெருகேற்ற வடிவமைப்பு செய்ய உத்தேசித்துள்ளோம்” என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: ISRO
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.