'உலக மொபைல் காங்கிரஸ்' நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது போன்களை வெளியிட்டது. அப்படி வெளியான கேலக்ஸி ஏ வரிசை போன்களின் விலை பட்டியல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், நெதர்லாந்த் சாம்சங் நிறுவனம் சாம்சங்க் கேலக்ஸி ஏ50 ரூ.28,100 க்கு விற்பனை செய்யப்படலாம் என தகவல் அளித்தது. மேலும் சாம்சங் தென்கொரியா அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல் படி அடுத்த மாதம் இந்த புதிய தயாரிப்புகள் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியாவில் சாம்சங் ஏ வரிசை போன்களின் அறிமுக விழா இருக்கும் நிலையில் ஏப்ரல் இறுதிக்குள் கேலக்ஸி ஏ50 இந்தியாவில் விற்பனையாகிவிடும் என தகவல் வெளியானது.
சாம்சங் கேலக்ஸி ஏ50 அமைப்புகள்:
சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையின் படி தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி ஏ50, 6.4 இஞ்ச் நீளமுள்ள சூப்பர் அமோலெட் (இன்ஃபினிட்டி-யூ) முழு ஹெச்டி திரையை கொண்டுள்ளது.
மேலும் இந்த கேலக்ஸி ஏ50 4 மற்றும் 6 ஜிபி ரேம்களும் 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி மற்றும் பெயர் வெளியிடப்படாத ஆக்டா கோர் பிராசஸ்சார் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வெளியாவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேமரா வசதிகள் பொருத்தவரை இந்த கேலக்ஸி ஏ50 வகை ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்களும், அவைகளில் 25 / 8 / 5 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்ஃபி கேமரா பொருத்தவரை 25 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ50 உடன் அறிமுகமான ஏ30 போனின் விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் அறியப்படாத நிலையில், அது பட்ஜட்போனாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்