இக்கண்ணாடிகள் நல்ல விற்பனையை அள்ளும் என எதிர்பாக்கப்படுகிறது
சியோமி எம்.ஐ சார்பாக போலோரையிஸ்டு வேவ்வேரர் மற்றும் எம்.ஐ போலோரையிஸ்டு கண் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் 800 கண்ணாடிகளை எம்.ஐ போலோரையிஸ்டு வேவ்வேரர் 699 ரூபாய், எம்.ஐ ஏவியேட்டர்கள் 1,200 கண்ணாடிகள் வரை ரூபாய் 899 விலைகளுக்கு விற்பனையை தொடங்கியுள்ளது. இக்கண்ணாடிகளின் அசல் மார்கெட் விலையைவிட சுமார் 300 ரூபாய் குறைவைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இக்கண்ணாடிகள் வாடிக்கையாளர்களின் கண்களை சூரிய ஒளியுடன் வரும் அல்ட்ரா வைலட் ரேய் எனப்படும் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து கண்களை 100 சதவிகிதம் பாதுகாக்கும்.
அத்துடன் யு.வி400 எனப்படும் அல்டிரா வைலட் ரேஸ்சிடமிருந்து காப்பதற்க்காக ஓ6 வகை கண்ணாடியின் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. மேலும் கண்ணாடியில் கீரல்கள் விழாது இந்த வகைக் கண்ணாடி பல ரகங்களிளும் கிடைக்கிறது. நீலம், பச்சை மற்றும் சாம்பல் நிற வண்ணங்களில் கிடைக்கும் இந்த கண்ணாடிகள் வரும் ஜனவரி 1 முதல் ஷிப்பிங்கை தொடங்குகிறது. எம்.ஐ. செல்வ்வி ஸ்டிக் மற்றும் புளூடூத் ஆடியோ வசதி கூடிய ஸ்பிக்கர் சமீபகாலமாக வெளிவந்த நிலையில் இக்கண்ணாடிகள் நல்ல விற்பனையை அள்ளும் என எதிர்பாக்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Honor X80 Pricing Details and Key Specifications Tipped Online