ஜியோமியின் Mi Electric Toothbrush T300 ஒவ்வொரு 30 விநாடிகளுக்குப் பிறகு பல் துலக்குவதை இடைநிறுத்த ஈக்விக்லீன் ஆட்டோ டைமருடன் வருகிறது.
 
                ஜியோமியின் Mi Electric Toothbrush T300, IPX7 நீர் எதிர்ப்பு வடிவமைப்பில் வருகிறது
ஜியோமி இந்தியாவில் Mi Electric Toothbrush T300-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வரவு, 2018-ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகமான Mi Electric Toothbrush-ன் மாற்றப்பட்ட பதிப்பாகும், இது மேம்பட்ட பல் பராமரிப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Mi Electric Toothbrush T300 ஆனது ஒரு காந்த லெவிட்டேஷன் சோனிக் மோட்டருடன் வருகிறது, இது பாரம்பரிய பல் தூரிகை விட 10 மடங்கு திறமையான பற்களை சுத்தம் செய்யும். இந்த மோட்டார், நிமிடத்திற்கு 31,000 அதிர்வுகளை உருவாக்குகிறது. கூடுதலாக, Mi Electric Toothbrush T300 ஒரு தூரிகை தலையுடன் வருகிறது, இது DuPont Tynex StaClean Antimicrobial bristles கொண்டது, அவை பாக்டீரியா தடுப்பில் 99 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Mi Electric Toothbrush T300 தற்போது Mi.com வலைத்தளத்தின் மூலம் கிர கிரெளட்ஃபண்டிங்கின் தள்ளுபடியுடன் ரூ.1,299-க்கு கீழ் விலைக்குறியைக் கொண்டுள்ளது. மார்ச் 10 முதல் ஏற்றுமதிகளைத் தொடங்குவதாக நிறுவனம் உறுதியளிக்கிறது. மேலும், கிரெளட்ஃபண்டிங்கின் பிரச்சாரத்தை பதிவு செய்யுங்கள், இந்த பல் தூரிகை ரூ.1,599-க்கு கிடைக்கிறது.
electric toothbrush-ப் பயன்படுத்துவதற்கு அவசியமான தூரிகைத் தலைகள் கிடைப்பது குறித்து Xiaomi எந்த தெளிவையும் வழங்கவில்லை. மேலும், கொல்கேட் மற்றும் ஓரல்-பி ஆகியவற்றிலிருந்து இதேபோன்ற electric toothbrush உடன் விலை நிர்ணயம் பெறுவீர்கள்.
Mi Electric Toothbrush T300 முன்பே ஏற்றப்பட்ட இரட்டை-புரோ தூரிகை முறைகள் மற்றும் ஈக்விக்லீன் ஆட்டோ டைமருடன் வருகிறது. பயனர்கள் விரும்பும் பாணியையும் வேகத்தையும் பொருத்த அனுமதிக்கும் வகையில் இரட்டை-புரோ தூரிகை முறைகளில் ஸ்டாண்டர்ட் மோட் மற்றும் மென்மையான மோட் ஆகியவை அடங்கும், ஈக்விக்லீன் ஆட்டோ டைமர் ஒவ்வொரு 30 விநாடிகளுக்குப் பிறகும் பல் துலக்குவதை இடைநிறுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
துல்லியமான சுத்தம் செய்ய, Mi Electric Toothbrush T300 காந்த லெவிட்டேஷன் சோனிக் மோட்டாரைக் கொண்டுள்ளது, இது தனியுரிம தூரிகைத் தலையுடன் வேலை செய்கிறது. இந்த தூரிகை ஒரு USB Type-C port உடன் வருகிறது, இது, எந்த 5V சார்ஜர் அல்லது பவர் பேங்கைப் பயன்படுத்தி உள்ளமைக்கப்பட்ட பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்கிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் நிலையை வழங்க எல்.ஈ.டி இண்டிகேட்டர் உள்ளது. மேலும், Mi Electric Toothbrush T300 ஒரே சார்ஜில் 25 நாட்கள் வரை பயன்பாட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Mi Electric Toothbrush T300, IPX7 நீர் எதிர்ப்பு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பல் தூரிகை மூன்று வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது, பயனர்கள் குடும்ப உறுப்பினர்களிடையே தூரிகை தலைகளை அடையாளம் காண அனுமதிக்கின்றனர். நீங்கள் ஏற்கனவே electric toothbrush பயனராக இருந்தால் இது புதியதல்ல.
ஜியோமி, Mi Electric Toothbrush T300 குறைந்த சத்தத்தை 65 டி.பீ-க்கு வழங்குகிறது. மேலும், பல் தூரிகையின் பின்புறத்தில் ஆன்டி-ஸ்லிப் பம்ப் ஸ்ட்ராப் டிசைனுடன் வருகிறது.
ஜூலை 2018-ல், ஜியோமி, செயலி ஆதரவு மற்றும் புளூடூத் இணைப்புடன் Mi Electric Toothbrush-ஐ உலக சந்தைகளுக்கு கொண்டு வந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                            
                                Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                        
                     OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities
                            
                            
                                OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities
                            
                        
                     CERT-In Warns Google Chrome Users of High-Risk Flaws on Windows, macOS, and Linux
                            
                            
                                CERT-In Warns Google Chrome Users of High-Risk Flaws on Windows, macOS, and Linux
                            
                        
                     Kantara: A Legend Chapter 1 Now Streaming Online: Know Everything About Plot, Streaming, Cast, and More
                            
                            
                                Kantara: A Legend Chapter 1 Now Streaming Online: Know Everything About Plot, Streaming, Cast, and More