பிப்ரவரி 20-ல் வெளியாகிறது ஜியோமியின் Mi Electric Toothbrush! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
பிப்ரவரி 20-ல் வெளியாகிறது ஜியோமியின் Mi Electric Toothbrush! 

Xiaomi Mi Electric Toothbrush பல தனிப்பயனாக்கக்கூடிய தூரிகை முறைகளுடன் வருகிறது

ஹைலைட்ஸ்
 • Xiaomi Mi Electric Toothbrush, ஸ்பெயினில் ஜூலை 2018-ல் தொடங்கப்பட்டது
 • ஜியோமி தனது புதிய அறிமுகத்தை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளது
 • Xiaomi Mi Electric Toothbrush ப்ளூடூத் இணைப்புடன் வருகிறது

ஜியோமி தனது Electric Toothbrush-ஐ பிப்ரவரி 20-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது, இது நிறுவனத்தின் சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட டீஸர் மூலம் தெரியவந்துள்ளது. சீன நிறுவனம் Mi Electric Toothbrush-ஐ 2018-ஆம் ஆண்டில் உலகளாவிய சந்தைகளுக்கான முதல் பல் பராமரிப்பாக அறிமுகப்படுத்தியது. Mi Electric Toothbrush, 230gf.cm-க்கும் அதிகமான முறுக்குவிசை மூலம் நிமிடத்திற்கு 31,000 முறை அதிர்வுறும் என்று கூறப்படுகிறது. இது பல தனிப்பயனாக்கக்கூடிய தூரிகை முறைகளுடன் வருகிறது மற்றும் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை செயல்படுத்த ஒரு நிலை கண்டறிதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

Xiaomi India தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள டீஸர், பிப்ரவரி 20-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Electric Toothbrush-ஐப் பற்றிய ஒரு பார்வையைத் தருகிறது. இது வேறு யாருமல்ல, ஸ்பெயினில் Mi Electric Toothbrush EUR 29.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,300) விலைக் குறியிட்டுடன் ஜூலை 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

Mi Electric Toothbrush ஒரு காந்த லெவிட்டேஷன் சோனிக் மோட்டருடன் வருகிறது மற்றும் அரிப்பு எதிர்ப்பு, உலோகம் இல்லாத தூரிகை தலையைக் கொண்டுள்ளது. இந்த தூரிகை ஸ்டாண்டர்ட் மற்றும் ஜென்டில் உள்ளிட்ட பல தனிப்பயனாக்கக்கூடிய தூரிகை முறைகளுடன் வருகிறது. பயனர்கள் தங்கள் உணவு மற்றும் தினசரி துலக்குதல் பழக்கத்தின் அடிப்படையில் தூரிகை நேரம், தூரிகை வலிமை மற்றும் பல்வேறு வாய்வழி பராமரிப்பு செயல்பாடுகளை சரிசெய்ய மொபைல் செயலியுடன் Mi Electric Toothbrush-ஐ இணைக்க முடியும்.

ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி, அர்ப்பணிக்கப்பட்ட செயலியின் மூலம் காலம், பாதுகாப்பு மற்றும் சீரான தன்மை போன்ற புள்ளிவிவரங்களை வழங்க இணக்கமான ஸ்மார்ட்போனுடன் Mi Electric Toothbrush இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் துலக்குதல் அறிக்கைகளையும் பகிர்ந்து கொள்கிறது.

ஜியோமி, Mi Electric Toothbrush-ல் உயர் துல்லியமான முடுக்கம் சென்சார் வழங்கியுள்ளது, இது வாயில் ஆறு வெவ்வேறு மண்டலங்களைக் கண்காணிப்பதன் மூலம் தூரிகை நிலையை உணருவதாகக் கூறப்படுகிறது.

Mi Electric Toothbrush-ன் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி ஒரே சார்ஜில் 18 நாட்கள் பயன்பாட்டை வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல் துலக்குதலின் சார்ஜிங் அடிப்படை ஒரு USB போர்ட்டுடன் வருகிறது, இது power banks மற்றும் கணினிகள் உள்ளிட்ட பல்வேறு சார்ஜிங் சாதனங்களுடன் நேரடியாக இணைக்கப்படலாம். இந்த தூரிகை IPX7 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டுடன் வருகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாட்ஸ்அப் குரூப் காலிங்கை இப்போ ஈசியா பண்ணலாம்! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!
 2. ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் ப்ளானை நீட்டித்தது பிஎஸ்என்எல்!
 3. மளிகை பொருட்கள் விநியோகத்தை தொடங்கியது ஜோமாடோ! 
 4. இன்ஃபினிக்ஸ் நோட் 7 சீரிஸின் விவரங்கள் வெளியாகின! 
 5. Search, டவுன்லோடுகளில் புது அப்டேட்ஸ் - WhatsApp பயனர்களே தெரிஞ்சுக்கோங்க!
 6. கொரோனா வைரஸ் காரணமாக ரோபோக்களுக்கு பட்டமளிப்பு விழா - சமூக விலகலை கடைபிடிக்கும் ஜப்பான்!
 7. கொரோனா வைரஸ் இருக்கிறவங்கள கண்டுபிடிக்க புது செயலி... ஐஐடி பேராசிரியர் அசத்தல்!
 8. புது வேரியண்டில் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு! 
 9. டிஷ் டிவி, ஏர்டெல், டாடா ஸ்கையின் அதிரடி நடவடிக்கை!
 10. கொரோனா அச்சுறுத்தல்: Forward மெஸேஜ்களுக்கு WhatsApp விதித்த கட்டுப்பாடு!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com