Photo Credit: Woz.org
ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் (Steve Wozniak) 1985-ஆம் ஆண்டில் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஆனால், இன்றுவரை வாராந்திர சம்பள காசோலைகளைப் பெற்று வருகிறார் என்று அவர் தெரிவித்தார். வோஸ் (Woz) சமீபத்தில் கை கவாசகியின் (Guy Kawasaki's) குறிப்பிடத்தக்க மக்கள் போட்காஸ்டில் இருந்தார். அங்கு ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் மற்றும் அவரது சம்பள காசோலை பற்றி பேசினார். வாரத்திற்கு 50 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 3,600) மட்டுமே. நிறுவனம் தொடங்கியதிலிருந்து சம்பள காசோலை பெறும் ஒரே நபர் என்றும் அவர் கூறுகிறார்.
“நான் இன்னும் Apple ஊழியர். நாங்கள் நிறுவனத்தைத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு வாரமும் சம்பள காசோலையைப் பெறும் ஒரே நபர். நான் ஒரு சிறிய சம்பள காசோலையைப் பெறுகிறேன், அதில் இருந்து, உங்கள் பணத்தை சேமிப்பதற்காக, நிறுவனங்கள் வைத்திருக்கும் நிதிக்குச் சென்றபின்னர்... வரிக்குப் பிறகு வாரத்திற்கு 50 டாலர் அல்லது எனது வங்கிக் கணக்கில் ஏதேனும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்”, என்று வோஸ் (Woz) பகிர்ந்து கொண்டார். இது ஒரு வருடத்திற்கு $ 2,600 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,85,000) ஆகும். இது மிகவும் குறைவானதாக தோன்றலாம். ஆனால், பண மதிப்பைக் காட்டிலும், சம்பள காசோலையின் குறியீட்டு மதிப்பு மிகவும் முக்கியமானது.
அவர் இணைந்து நிறுவிய நிறுவனத்தைப் பற்றி பேசுகையில், வோஸ் (Woz) தன்னிடம் எப்போதும் வலுவான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் “மிகவும் வெளிப்படையான மற்றும் நேர்மையானவர்” என்பதால், அவர் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குள் இருக்க முடியாது. போட்காஸ்டின் போது, பணம் மக்களை மாற்றுவதாக உணர்கிறேன் என்று வோஸ் பகிர்ந்து கொண்டார். அதனால், அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவர் பங்குகளைப் பின்பற்றுவதில்லை, தனது ஆப்பிள் பங்குகளைப் பார்த்ததில்லை. அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸை (Steve Jobs) மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலில் தனது நேரத்தை செலவழித்தபோது விஷயங்களின் வணிகப் பக்கத்தை கவனித்துக் கொள்ள அனுமதித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், அவர் தனது கவலைகளை நிறுவனத்திடம் தெரிவிப்பதில் இருந்து வெட்கப்படுவதில்லை. ஆப்பிள் தனது போன்களிலிருந்து headphone jack-ஐ அகற்ற முடிவு செய்தபோது, நிறுவனம் அவ்வாறு செய்ததற்காக வோஸ் (Woz) அவதூறாக பேசினார். அவர் ஆப்பிள் வாட்சை "கட்டாய கொள்முதல் அல்ல" (not a compelling purchase) என்றும் அழைத்தார்.
சரியாக, ஸ்டீவ் வோஸ்னியாக் (Steve Wozniak) பணத்திற்குப் பின் ஓடத் தேவையில்லை. பல ஆண்டுகளாக, அவர் தனது வணிக முயற்சிகள் மற்றும் பங்குகளில் இருந்து $ 100 மில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்பைக் குவித்துள்ளார்.
முழு போட்காஸ்டையும் இங்கே (here) கேளுங்கள்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்