Snapdragon Elite சிப் மூலம் இயங்கப்போகும் Maruti Suzuki வாகனங்கள்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 7 நவம்பர் 2024 11:18 IST
ஹைலைட்ஸ்
  • எதிர்கால மாருதி கார்களில் Snapdragon Elite சிப் பொருத்தப்பட உள்ளது
  • இது மேம்பட்ட டிஜிட்டல் அனுபவங்களை வழங்கும்
  • Oryon CPU, Adreno GPU மற்றும் Hexagon NPU இதில் இருக்கும்

Snapdragon Cockpit Elite and Ride Elite are part of the Snapdragon Digital Chassis Solution portfolio

Photo Credit: Qualcomm

இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் காரை Evx என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாக உள்ளது. 2020, ஏப்ரல் முதல் சிறிய ரக டீசல் என்ஜின் பெற்ற கார்களின் உற்பத்தியை மாருதி சுசூக்கி கைவிட முடிவெடுத்துள்ளது. பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 23 சதவீதம் பங்களிப்பை டீசல் என்ஜின் கொண்ட கார்கள் பெற்றுள்ளது.

மின்சார கார் தயாரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான Maruti Suzuki, Qualcomm நிறுவனத்துடன் இணைந்து புதிய Snapdragon Elite ஆட்டோமோட்டிவ் சிப்களை வாகனங்களில் பயன்படுத்த தயாரிக்க உள்ளது. ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான Suzuki, அதன் இந்திய துணை நிறுவனமான Maruti Suzuki உடன் இணைந்து Qualcomm இடையே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் சரியான நோக்கம் தெரியவில்லை என்றாலும், ஸ்னாப்டிராகனின் புதிய ஆட்டோமோட்டிவ் சிப்கள் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், கார் தொழில்நுட்பங்கள் மற்றும் மாருதி சுஸுகியின் ஸ்மார்ட் கார்களில் உள்ள பிற அம்சங்களை மேம்படுத்தும் என்று ஊகிக்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் Qualcomm ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பிற இந்திய வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்துள்ளது.

மாருதி சுஸுகி கார்களில் ஸ்னாப்டிராகன் சிப்ஸ்

கடந்த மாதம் ஹவாயில் நடந்த ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டில், குவால்காம் வாகனத் துறைக்கு ஏற்றவாறு இரண்டு புதிய சிப்செட்களை அறிவித்தது : ஸ்னாப்டிராகன் காக்பிட் எலைட்(Snapdragon Cockpit Elite) மற்றும் ஸ்னாப்டிராகன் ரைடு எலைட்(Snapdragon Ride Elite) ஆகியவை ஸ்னாப்டிராகன் டிஜிட்டல் சேஸ் சொல்யூஷன் போர்ட்ஃபோலியோவின்(Snapdragon Digital Chassis Solution) ஒரு பகுதியாக வெளியானது. இந்த ஸ்னாப்டிராகன் சில்லுகளில் ஏதேனும் ஒன்றை மாருதி சுஸுகி கார்களில் பயன்படுத்துவதை புதிய ஒப்பந்தம் செயல்படுத்தும்.


ஸ்னாப்டிராகன் காக்பிட் எலைட் சிப் கார்களில் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவங்களை வழங்கும். அதே நேரத்தில் ரைடு எலைட் சிப் காரின் ஆட்டோமேட்டிக் திறன்களை மேம்படுத்தும் என குவால்காம் நிறுவனம் கூறுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் இந்த இரண்டு செயல்பாடுகளையும் ஒரு தனி SoC சிப்செட் கட்டமைப்பின் மூலம் இணைக்க முடியும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள், மேம்பட்ட டிரைவிங் அமைப்புகள் (ADAS), நிகழ்நேர ஓட்டுநர் கண்காணிப்பு மற்றும் வாகனங்களில் லேன் மற்றும் பார்க்கிங் உதவி போன்ற அம்சங்களை சிப் மேம்படுத்தும்.


இரண்டு சிப்களும் Oryon CPU, Adreno GPU மற்றும் NPU ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முந்தைய முதன்மை தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த செயலிகளைப் பயன்படுத்தி, இயங்குதளங்கள் மூன்று மடங்கு வேகமான CPU மற்றும் 12 மடங்கு வேகமான செயற்கை நுண்ணறிவு (AI) செயல்திறனை வாகனத்தில் கொண்டுவர முடியும். இந்த சிப்கள் 40 மல்டிமாடல் சென்சார்களை சப்போர்ட் செய்கிறது.

இதில் 360 டிகிரி கவரேஜுக்கான 20 உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் அடங்கும். அவை மேம்படுத்தப்பட்ட படங்களை வழங்க AI-மேம்படுத்தப்பட்ட இமேஜிங் கருவிகளைப் பயன்படுத்துகின்றன. இவை அடுத்து வரவிருக்கும் வாகன சென்சார்கள் மற்றும் வடிவங்களுடன் இணக்கமாக உள்ளன.


ஸ்னாப்டிராகன் காக்பிட் எலைட் மற்றும் ஸ்னாப்டிராகன் ரைடு எலைட் ஆகிய இரண்டும் 2025 ஆம் ஆண்டில் கிடைக்கும் என்று குவால்காம் கூறுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Qualcomm, Snapdragon cockpit, Maruti Suzuki
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  2. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  3. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  4. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
  5. அதிர்ச்சி! Vivo X Fold 5 விலை ₹1.5 லட்சம்! X200 FE-ல் 6500mAh பேட்டரி - லீக் தகவல்கள் இதோ!
  6. Apple-ன் அடுத்த மாஸ்டர்பீஸ்: iPhone 17 Pro Max-ல் பேட்டரி புரட்சி! நீண்ட நேரம் யூஸ் பண்ணலாமா?
  7. Honor X9c 5G: ஜூலை 7-ல் இந்திய லான்ச்! 108MP OIS கேமரா, 6600mAh பேட்டரியுடன் மிரட்ட வருகிறது!
  8. Amazon Prime Day Sale: எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 65% வரை ஆஃபர்! பேங்க் சலுகைகளுடன் அசத்துகிறது!
  9. నథింగ్ ఫోన్ 3 స్మార్ట్‌ఫోన్ Android 15 ఆధారంగా రూపొందించిన నథింగ్ OS 3.5 పై రన్ అవుతుంది
  10. Nothing Headphone 1: 80 மணி நேர பேட்டரி லைஃப், டிரான்ஸ்பரண்ட் டிசைனுடன் இந்தியாவில் லான்ச்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.