Jays 'x-Five' Wireless Headphones இந்தியாவில் அறிமுகம்!

Jays x-Five headphones, 20 மணி நேர பேட்டரி ஆயுளைக் கோருகிறது.

Jays 'x-Five' Wireless Headphones இந்தியாவில் அறிமுகம்!

Jays x-Five headphones-ன் விலை ரூ. 3,999

ஹைலைட்ஸ்
  • Jays x-Five Wireless Headphones-ன் விலை ரூ. 3,999
  • 20 மணி நேர பேட்டரி ஆயுளைக் கோருகிறது
  • 300 மணிநேர நிலைப்பாட்டை கொண்டது
விளம்பரம்

ஸ்வீடிஷ் Headphones உற்பத்தியாளர் Jays இந்த வாரம் தனது Jays 'x-Five' Wireless Headphones-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். புதிய புளூடூத் ஹெட்செட் 20 மணிநேர பிளேடைம் வழங்குவதாக உறுதியளிக்கிறது. இது மடிக்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த மைக் மற்றும் கட்டுப்பாட்டு பொத்தான்களைக் கொண்டுள்ளது. Jays 'x-Five' Wireless Headphones MRP ரூ. 6,999. Headphone Zone-ல் தற்போது 3,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

Jays 'x-Five' Wireless என்பது இலகுரக மற்றும் கச்சிதமான over-the-ear ஹெட்செட் ஆகும். இது மடிக்கக்கூடியவை என்பதால் காதுகளில் அணிய சுலபமாக இருக்கும். இதற்கு memory foam padding உதவுகிறது.

இந்த Jays 'x-Five' Wireless Headphones, புளூடூத் v4.1 ஐ ஆதரிப்பதோடு, இணைப்புக்கு 10 மீட்டர் வரம்பைக் கொண்டுள்ளன. உள்ளமைக்கப்பட்ட SBC மற்றும் AAC codecs-க்கும் ஆதரவு உள்ளது. இந்தியாவில் தனது  Jays 7-wireless headphone-களை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது.

Jays 'x-Five' Wireless Headphones உள்ளடிக்கிய பேட்டரியைக் கொண்டுள்ளன. மேலும், நிறுவனம் 20 மணி நேர பேட்டரி ஆயுளைக் கோருகிறது. இந்த சாதனம் முழுவதுமாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் எடுக்கும். மேலும் 300 மணிநேர நிலைப்பாட்டை கையாள முடியும். இடது ear cup-ல் சாதனத்தை சார்ஜ் செய்ய Micro-USB port உள்ளது. Jays 'x-Five' Wireless Headphones, 40mm audio drivers மற்றும் 32Hz - 18,000Hz frequency-ஐக் கொண்டுள்ளன. 150 கிராம் எடையுள்ள இந்த ஹெட்ஃபோன் 1 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகின்றன.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: JBL, சோனி, போட் மற்றும் பல பிராண்டுகளின் சவுண்ட்பார்களில் சிறந்த சலுகைகள்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ஹெட்ஃபோன்களுக்கான சிறந்த சலுகைகள்
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: சாம்சங், ஒன்பிளஸ், ஷாவ்மி டேப்லெட்களுக்குச் சிறந்த சலுகைகள்!
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: HP, கேனான் பிரிண்டர்களுக்குச் சிறந்த தள்ளுபடிகள்!
  5. ஆகஸ்ட் 14 அறிமுகத்திற்கு முன்பே Moto G Max-ன் விவரங்கள் மற்றும் வண்ணங்கள் இந்தியாவில் வெளியாகின
  6. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: LG, கேரியர் ஏசிகளுக்குச் சிறந்த ஆஃபர்கள்!
  7. ஐபோன் 17 வாங்க நினைக்கிறீர்களா? ஒரு திடீர் விலை உயர்வு உங்கள் எண்ணத்தை மாற்றக்கூடும்
  8. அமேசான் ஃப்ரீடம் சேல் 2026: பிரீமியம் OLED மற்றும் QLED டிவிகளில் சிறந்த சலுகைகள்
  9. அமேசான் ஃப்ரீடம் சேல் 2026: முன்னணி பிராண்டுகளின் மைக்ரோவேவ் ஓவன் மற்றும் OTG-களில் சிறந்த சலுகைகள்
  10. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் நாள் 1 சிறப்பம்சங்கள்: மொபைல், டேப்லெட், ஹெட்போன் சிறந்த சலுகைகள்!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »