Huawei Smart Screen V55i TV-யின் பாப்-அப் கேமரா 1080p எச்டி வீடியோ அழைப்புகளுக்கு திறன் கொண்டது.
Huawei Smart Screen V55i 4 ஜிபி ரேமை பேக் செய்கிறது
ஹுவாயின் புதிய Huawei Smart Screen V55i டிவி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவியில் 4 கே எல்சிடி திரை கொண்ட மெல்லிய பெசல்களைக் கொண்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. ஸ்மார்ட் டிவியில் பாப்-அப் எச்டி கேமராவும் உள்ளது.
சீனாவில் டிவியின் விலை சிஎன்ஒய் 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41,000) ஆகும். இந்த டிவி, Interstellar Black மற்றும் Silver Diamond Grey கலர் ஆப்ஷன்களில், ஏப்ரல் 26 முதல் விமால் வழியாக சீனாவில் விற்பனை செய்யப்படும்.
Huawei Nova 7 Pro, Huawei Nova 7, Huawei Nova 7 SE With 5G Support Launched: Price, Specifications
நிறுவனத்தின் வெய்போ பதிவின் படி, இந்த டிவி 55 அங்குல 4 கே எல்சிடி டிஸ்ப்ளே, 2.6 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களைக் கொண்டுள்ளது. இந்த டிவி ஹொங்கு குவாட் கோர் ஸ்மார்ட் சிப்செட்டுடன் வருகிறது. இது இரண்டு கார்டெக்ஸ்-ஏ 73 கோர்கள் மற்றும் இரண்டு கோர்டெக்ஸ்-ஏ 53 கோர்களுடன் வருகிறது. இது மாலி-ஜி 51 ஜி.பீ.யு பொருத்தப்பட்டுள்ளது. டிவியில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேக் உள்ளது.
Huawei MatePad With Kirin 810 SoC, 8-Megapixel Rear Camera Launched: Price, Specifications
இந்த டிவியில் லோ-லைட் பாப்-அப் கேமராவும் உள்ளது. இது 1080p எச்டி வீடியோ அழைப்புகளுக்கான திறன் கொண்டது. இந்த கேமரா, டிவி சட்டகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. இது தேவைப்படும்போது மட்டுமே வரும். V55i, ஸ்மார்ட் ஆடியோ சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக 2.4L பெரிய ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இதன் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் குரல் கட்டுப்பாட்டு அம்சம் மற்றும் டிவியில் AI ஃபிட்னஸ் 2.0 செயல்பாட்டுடன் வருகிறது.
உங்கள் மொபைல் திரையை டிவியில் திரையிட உதவும் ஸ்மார்ட் க்ராஸ் திரை அம்சமும் உள்ளது. இந்த டிவி வெறும் 6.9 மிமீ தடிமன் கொண்டது. இது நான்கு 10W ஸ்பீக்கர்கள் மற்றும் நான்கு 2W ஸ்பீக்கர்களுடன் வருகிறது. டிவியில் எச்.டி.எம்.ஐ 2.0, 3-இன் -1 ஏ.வி, டி.டி.எம்.பி மற்றும் யூ.எஸ்.பி 3.0 போன்ற போர்ட்டுகள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro Series Colourways and Memory Configurations Listed on Amazon
BSNL Bharat Connect Prepaid Plan With 365-Day Validity Launched; Telco's BSNL Superstar Premium Plan Gets Price Cut