Photo Credit: Flipkart
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Flipkart Big Billion Days Sale 2024 பற்றி தான்.
Flipkart Big Billion Days Sale 2024 குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. பிளஸ் மெம்பர்களுக்கு செப்டம்பர் 29 மற்றும் அனைவருக்கும் செப்டம்பர் 30 முதல் இந்த விற்பனை தொடங்கும் என கூறப்படுகிறது. Flipkart Plus பயனர்களுக்கு முன்கூட்டியே Big Billion Day தொடங்கும். Flipkart Big Billion Days விற்பனை தேதியை முன்கூட்டியே அணுக Flipkart Plus மெம்பர்ஷிப்பை எப்படிப் பெறுவது என்பதையும் இப்போது பார்க்கலாம்.
Flipkart Plus உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 26 முதல் Flipkart Big Billion Days Sale தொடங்குகிறது. வழக்கமான பயனர்களுக்கு, பிளிப்கார்ட் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கும். 2023 Flipkart BBD விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கியது. அதனால், இந்த முறை கொஞ்சம் சீக்கிரம் தொடங்குகிறது. நீங்கள் முன்கூட்டியே அணுக விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது பற்றி அடுத்து பார்க்கலாம்.
Flipkart Plus வசதியை பொறுத்தவரை பயனர் கடந்த 365 நாட்களில் 4 முறை வெற்றிகரமான பரிவர்த்தனைகளைச் செய்திருக்க வேண்டும்
Flipkart Plus பிரீமியத்திற்கு, கடந்த 365 நாட்களில் 8 வெற்றிகரமான பரிவர்த்தனைகளைச் செய்திருக்க வேண்டும்.
விற்பனை நிகழ்வுகளுக்கான ஆரம்ப அணுகல் தவிர, பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாங்குதலிலும் சிறப்புச் சலுகைகளிலும் 2x சூப்பர் காயின்களைப் பெறுவார்கள்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்புடைய துணை பொருட்களுக்கு 50-80 சதவீதம் தள்ளுபடி இருக்கலாம். டிவி மற்றும் பிற சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கலாம். 4K டிவிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது மட்டுமின்றி, மெத்தைகள், வீட்டு அலுவலக உபகரணங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு 85 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
மற்ற வரம்பில் உள்ள தயாரிப்புகளுக்கு சிறிதளவு தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். பரிமாற்றச் சலுகைகள், கட்டணமில்லா EMI, வங்கிச் சலுகைகள், கேஷ்பேக், கூப்பன்கள் வசதியும் இருக்கிறது. Flipkart Axis பேங்க் கிரெடிட் கார்டு மூலம் கேஷ்பேக் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
Big Billion Days Flipkart தளத்தில் மிகப்பெரிய விற்பனையில் ஒன்றாகும். பல்வேறு தயாரிப்புகளுக்கு பெரிய அளவில் தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனை பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். எனவே காத்திருங்கள்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்