டீடெல் டி1 டிவியானது டெல்லியில் செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.3,999 ஆகும். இது உலகின் மிக விலை மலிவான எல்சிடி டிவியாகும். இதில் 19-இன்ச் ஏ+கிரேடு பேனல் HDMI போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட்டினைக் கொண்டுள்ளது.
மற்ற டிவிக்களைப் போல டீடெல் டி1 டிவியினை கம்பியூட்டர் மானிட்டர் மற்றும் லேப்டாப்- ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். டீடெல் நிறுவனம் போன் தயாரிப்பில் பெயர்போனது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது. இதுவரை 7 எல்இடி டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அவை 24இன்ச் - 65இன்ச் திரையினைக் கொண்ட டிவிகள் ஆகும்.
இந்தியாவில் டீடெல் டி1 டிவியின் விலை
இதன் விலை ரூ. 3,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் MRP ரூ. 4,999 ஆகும். இந்த புதிய டிவியினை டீடெல் இணையதளம் மற்றும் டீடெல் மொபைல் அப்பின் மூலம் வாங்கலாம். விநியோகஸ்தர்கள் மூலம் டீடெல் டி1 டிவியினை B2BAdda.com மூலமும் வாங்கலாம்,
டீடெல் டி1 டிவியின் முக்கியம்சம்ங்கள்
டீடெல் டி1 டிவியானது 19 இன்ச் டிஸ்பிளே பேனலை பெற்றுள்ளது. 1366*768 பிக்சல் மற்றும் 30000:1 காண்ட்ராஸ்டினைக் கொண்டுள்ளது.
இதன் பேனல் ஏ+ கிரேடு ஆகும். இதன் முன்பக்கத்தில் இரு ஸ்பீக்கர்கள் உள்ளன. 12W ஸ்பீக்கர் என்பதால் டிவியிலிருந்து வரும் சத்தத்தை தெளிவாக கேட்க முடியும்.
டீடெல் டி1 டிவியில் HDMI போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் உள்ளது. இதனை கம்பியூட்டருடனும் செயல்படும். மேலும் யுஎஸ்பி மல்டி மீடியா யுஎஸ்பி டிரைவ் மூலம் திரையிடும் ஆடியோ மற்றும் வீடியோவினை டீடெல் டிவி சப்போர்ட் செய்யும்.
இதுகுறித்து பேசிய டீடெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், டீடெல் டி1 டிவியானது வாடிக்கையாளர்களின் தேவையை குறைவான விலையில் முழுமையாக நிறைவு செய்யும் என்று கூறினார்.
மேலும், குக்கிராமங்களையும் டீடெல் டி1 டிவி போய் சேரும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்