ஹெட்போன், ஹெட்செட், இயர்போன், ஹெட்போன் சந்தையில் கலக்கி வரும் போட் நிறுவனம் தற்போது ரூ.2,999க்கு அட்டகாசமான ஏர்பாட்ஸை வெளியிட்டுள்ளது.
ஏர்பாட்ஸ் 511வி2 என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்தில் சில்வர் ஃபினிஷிங்கில் இந்த ஏர்பாட்ஸ்கள் சந்தைக்கு வந்துள்ளன. பார்த்தாலே கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மியூசில் லவ்வர்களை குறி வைத்து இந்த ஏர்பாட்ஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ. 2,999 இதன் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பொது முடக்கம் என்பதால் அமேசான் ஆன்லைனில் மட்டும் இந்த ஏர்பாட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்போர்ட் மாடலில் இருக்கும் இந்த ஏர்பாட்ஸ் 6எம்.எம். நீளம் கொண்டது. அலைவரிசை 20ஹெர்ட்ஸ் முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை இருக்கும். ப்ளூடூத் 5.0 அடிப்படையில் 10 மீட்டர் தூரத்திற்கு செயல்படும் தன்மை கொண்டது.
மொத்தமே 5.5 கிராம் எடை கொண்டதாக இந்த ஏர்பாட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 மைக்ரேஃபோன்கள் உள்ளன.
ஒவ்வொரு ஏர்பாட்சும் 60 ஆம்ப். பேட்டரி திறன் கொண்டது. சார்ஜ் ஏற்றும் பெட்டி 500 ஆம்ப் பேட்டரி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 6 மணி நேரத்திற்கு பேட்டரி நீடிக்கும்.
ஒட்டுமொத்தமாக 4 முறை சார்ஜ் ஏற்றும் பெட்டியில் இருந்து நாம் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.
ஏர் பாட்ஸிலேயே மியூசிக் கன்ட்ரோல் அமைப்புகள் உள்ளன. 10 வாட்ஸ் சார்ஜுக்கு இது சப்போர்ட் செய்யும். சார்ஜ் ஏற்றும் பெட்டி 2 மணி நேரத்தில் முழுமையான சார்ஜை எட்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்