குவால்காம் 4ஜி, 5ஜி மாநாட்டில் இந்தியாவில் தங்களது நிறுவனத்தின் அபார வளர்ச்சி குறித்து ஜெயின் விளக்கினார்.
நேற்று நடைபெற்ற குவால்கம் 4ஜி, 5ஜி மாநாட்டில், ஜியோமி இந்தியாவின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் தங்களது நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை வெளியிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்நாப்டிராகன் 670 அறிமுகப்படுத்தும்போதே ஸ்நாப்டிராகன் 675 எஸ்ஓசி பற்றி அறிவிக்கப்பட்டது.
குவால்காம் 4ஜி, 5ஜி மாநாட்டில் இந்தியாவில் தங்களது நிறுவனத்தின் அபார வளர்ச்சி குறித்து ஜெயின் குமார் பேசினார். சீனா நிறுவனமான ஜியோமி கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்தது. அந்த ஆண்டிலேயே 100,000 சாதனங்களையும், 2017ல் 9.2 மில்லியன் சாதனங்களையும் விற்பனை செய்து சாதனை படைத்ததுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கூகுள் தளத்தில் ரெட்மி போன்களை ஹாலிவுட் பிரபலங்களான டாம் குரூஸ், ஏஞ்சலினா ஜூலி, ராபர்ட் டவுனி ஜே.ஆர், மற்றும் கிம் கார்திஷியன் தேடியுள்ளதாக கூறினார்.
ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சியும் 11என்.எம் எல்.பி.பி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 670யுடன் ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சியை ஒப்பிடும் போது செல்போன் கேம்களின் வேகம் 30 சதவீதம் அதிகமாக இருக்கும். வலைதளங்களின் வேகம் 35 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்