விழாக்கால விற்பனையில் சாதனை படைத்த சியோமி ஸ்மார்ட்போன்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 14 நவம்பர் 2018 10:13 IST
ஹைலைட்ஸ்
  • ஒரு மாதத்தில் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.
  • அதே சமயம் 400,000 எம்.ஐ எல்இடி டிவிகளை விற்றுள்ளது .
  • மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 பில்லியன் டாலாரை எட்டியுள்ளது.

சியோமி இந்த மைல்கல் சாதனையை அக்.9 ஆம் தேதி முதல் நவம்.8 ஆம் தேதிக்குள் அடைந்துள்ளது.

Photo Credit: Twitter/Manu Kumar Jain

விழாக்காலம் தற்போது முடிவடைந்து விட்ட நிலையில், விழாக்காலத்தில் தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையில் படைத்த சாதனைக் குறித்து சியோமி அறிவித்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட், எம்.ஐ ஸ்டோர் போன்ற பல்வேறு தளங்களில் விற்பனை செய்யப்பட்ட சியோமி சாதனங்கள் 8.5 மில்லியன் என்ற கணக்கில் விற்பனையாகியுள்ளது.

இந்த விழாக்கால விற்பனையில் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட்டில் சியோமி நம்பர் ஒன்னாக இருந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டிவி, பவர் பேங்க், ஹோம் செக்கியூரிட்டி, ஏர் பியூரிஃபையர் என பல்வேறு சாதனங்களில் சியோமி நிறுவன பொருட்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்குள் 6 மில்லியன் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது.

சியோமி இந்த மைல்கல் சாதனையை அக்.9 முதல் நவம்.8ஆம் தேதிக்குள் அடைந்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் 4 மில்லியன் ஸ்மார்டுபோன்களை விற்றுள்ளது. 4 லட்சம் எம்.ஐ எல்இடி டிவி, எம்.ஐ எக்கோ சிஸ்டம் மற்றும் பிற சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சியோமி இந்தியாவின் ஆன்லைன் விற்பனையின் தலைமை நிர்வாகி ரகு ரெட்டி கூறுகையில், விழாக்கால சலுகை விற்பனை இந்தியாவில் எப்போதும் சிறப்பான முறையில் நடைபெறும். கடந்த வருடம் 4 மில்லியன் ஸ்மார்ட் போன்களும் இந்த வருடம் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐக்கு இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருக்கும் ரசிகர் கூட்டத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்திலும் அதே சமயம் மகிழ்ச்சியிலும் உள்ளோம். இதுபோன்ற வரவேற்பை வரும்காலத்தில் எங்கள் நிறுவனத்தின் நம்பகமான பொருட்களால் பெறுவோம் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.