Photo Credit: Twitter/Manu Kumar Jain
விழாக்காலம் தற்போது முடிவடைந்து விட்ட நிலையில், விழாக்காலத்தில் தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையில் படைத்த சாதனைக் குறித்து சியோமி அறிவித்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட், எம்.ஐ ஸ்டோர் போன்ற பல்வேறு தளங்களில் விற்பனை செய்யப்பட்ட சியோமி சாதனங்கள் 8.5 மில்லியன் என்ற கணக்கில் விற்பனையாகியுள்ளது.
இந்த விழாக்கால விற்பனையில் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட்டில் சியோமி நம்பர் ஒன்னாக இருந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டிவி, பவர் பேங்க், ஹோம் செக்கியூரிட்டி, ஏர் பியூரிஃபையர் என பல்வேறு சாதனங்களில் சியோமி நிறுவன பொருட்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்குள் 6 மில்லியன் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது.
சியோமி இந்த மைல்கல் சாதனையை அக்.9 முதல் நவம்.8ஆம் தேதிக்குள் அடைந்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் 4 மில்லியன் ஸ்மார்டுபோன்களை விற்றுள்ளது. 4 லட்சம் எம்.ஐ எல்இடி டிவி, எம்.ஐ எக்கோ சிஸ்டம் மற்றும் பிற சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சியோமி இந்தியாவின் ஆன்லைன் விற்பனையின் தலைமை நிர்வாகி ரகு ரெட்டி கூறுகையில், விழாக்கால சலுகை விற்பனை இந்தியாவில் எப்போதும் சிறப்பான முறையில் நடைபெறும். கடந்த வருடம் 4 மில்லியன் ஸ்மார்ட் போன்களும் இந்த வருடம் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எம்.ஐக்கு இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருக்கும் ரசிகர் கூட்டத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்திலும் அதே சமயம் மகிழ்ச்சியிலும் உள்ளோம். இதுபோன்ற வரவேற்பை வரும்காலத்தில் எங்கள் நிறுவனத்தின் நம்பகமான பொருட்களால் பெறுவோம் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்