இதுவரை சையோமி போன்கள் அனைத்துமே, இணையத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், Y2 போனும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் சையோமியின் ரெட்மி Y1 வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் Y2 போன் வெளியிடப்பட்டது. இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராதான்.
ரெட்மி எஸ்2 போனின் பெரும்பான்மையான வசதிகளை இந்த போன் பெற்றுள்ளது. Y2, டார்க் க்ரே, ரோஸ் கோல்டு, மற்றும் கோல்டு வண்ணங்களில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். ரெட்மியின் Y தொடர் ஸ்மார்ட் போன்களில் இந்த போனுக்கு தனி இடம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கூட, இந்த போன் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி Y2 இரண்டு வகைகளில் விற்பனைக்கு வருகிறது. 4 ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட டாப் வேரியன்ட் 12,999 ரூபாய்க்கு விற்கப்படும். 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேதிப்பு வசதி கொண்ட அடுத்த வேரியன்ட் 9,999 ரூபாய்க்கு உங்கள் வசமாகும்.
அமெசான் இந்தியா, சையோமியின் அதிகாரபூர்வ இணையதளங்களில் Y2-வை வாங்க முடியும். ஜூன் 12-ம் தேதி முதல் மற்ற போன்களோடு போட்டிபோடப் போகிறது Y2. இன்னும் ரீடெய்ல் ஸ்டோர்களுக்கு எப்போது வரும் என்று தெரிவிக்கப்படவில்லை. எப்படியும் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் இருக்கும் ரீடெய்ல் கடைகளையும் Y2 அலங்கரிக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்