Photo Credit: Weibo
ஷாவ்மி சப்-பிராண்ட் ரெட்மி மற்றொரு 5ஜி போனில் தீவிரமாக செய்பட்டு வருவதாக தெரிகிறது. மாடல் எண் M2002J9E கொண்ட போன் ரெட்மி நோட் வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த பட்டியல், 5ஜி இணைப்பிற்கான ஆதரவையும், சார்ஜ் வேகத்தின் சில விவரக்குறிப்புகளையும் காட்டுகிறது. மேலும், ரெட்மி கே 30-ஐ 5ஜி போனாக மாற்றும் என்று தெரிகிறது. இந்த போனில் 10.0VDC 2.25A சார்ஜிங்கிற்கான ஆதரவு இருக்கும் என்றும் இது அதிகபட்சமாக 22.5W சார்ஜ் வேகத்தைக் குறிக்கிறது. இந்த போனைப் பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஷாவ்மி தனது ரெட்மி கே 30-ஐ புதிய 5 ஜி போனாக மாற்றவுள்ளது. அதன் விலை சிஎன்ஒய் 1,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,600) விலையில் இருந்து சிஎன்ஒய் 1,500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,900) வரம்பில் உள்ளது. Redmi K30 4G வேரியண்ட் பட்டியலிடப்படும் என்றும் அந்த பதிவு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய Redmi K30 5G உள்ளிட்ட Xiaomi போன்களின் வெவ்வேறு விலை வரம்புகளை டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளது, இதன் விலை சிஎன்ஒய் 2,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,200) முதல் சிஎன்ஒய் 3,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.31,800) வரம்பில் உள்ளது.
ஷாவ்மி 10-சீரிஸ் சிஎன்ஒய் 4,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,500) விலையில் இருந்து சிஎன்ஒய் 6,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.63,700) வரம்பிலும் மற்றும் ஷாவ்மி மிக்ஸ் சீரிஸ் சிஎன்ஒய் 5,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,100) விலையில் இருந்து சிஎன்ஒய் 7,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.74,300) வரம்பில் இருக்கும்.
சி.என்.ஒய் 1,000 முதல் சி.என்.ஒய் 1,500 வரை வதந்தி பரவிய நிலையில், ஷாவ்மி அதன் வரிசையில் சேர்க்க பட்ஜெட் ஃப்ரெண்ட்லி 5ஜி போனில் செயல்படுவதாக தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்