சிறப்பம்சங்கள்:
ரெட்மி நோட்-5 ப்ரோ மாடலில் சிறிய மாறுதல்கள் செய்து நோட்-5 என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரெட்மி நோட்-5 இன் 6 ஜிபி ரேம்/ 128 ஜிபி இன்டர்னல் மெமரி மாடலை சீனாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 64 ஜிபி இண்டர்னல் மெமரியுடன் வந்த மாடலின் விலையே இதற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோட்-5 ப்ரோ என்ற மாடலில் சில மாற்றங்களைச் செய்து அறிமுகம் நோட்-5 அறிமுகமாகியிருக்கிறது. இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள் எனப் பார்த்தால், இந்த சீன மாடலில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது, இதன் இந்திய மாடலில் 20 மெகா பிக்சல் கேமரா இருந்தது. மேலும் சீன ரெட்மி நோட்-5 1.4 (இந்திய மாடலில் 1.25) மைக்ரான் பிக்சல் சென்சாரையும், பின் கேமராவில் f/1.9 அப்பர்ச்சரையும் (இந்திய மாடலில் f/2.2) கொண்டுள்ளது. சீன மாடலில் உள்ள பின் கேமரா ‘டூயல்’ PDAF (ஆட்டோ ஃபோக்கஸ்) கொண்டுள்ளது.
கறுப்பு, நீலம், சிவப்பு, தங்க நிறம், ரோஸ் கோல்ட் ஆகிய ஐந்து நிறங்களில் இந்த போன் கிடைக்கும். இது அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 64-ஜிபி மாடல் ரெட்மியின் சீன ஆன்லைன் தளங்களில் உடனே விற்றுத் தீர்ந்துள்ளது.
இதுப்போக நோட்-5 இன் 3 ஜிபி ரேம்/ 32 ஜிபி மெமெரி மாடல் சீனாவில் 999 சீன யுவான்கள் (10,100 ரூபாய்) என்ற விலைக்கும் 4ஜிபி ரேம்/64ஜிபி இண்டர்னல் மெமரி மாடல் 1299 சீன யுவான்கள் (13,200 ரூபாய்) என்ற விலைக்கும் கிடைக்கின்றன.
சையோமி ரெட்மி நோட்-5 (சீனா) விவரங்கள்:
டூயல் சிம், MIUI 9, 5.99 அங்குல ஃபுல் HD திரை (1080*2160 பிக்சல்கள்), 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ. இந்திய நோட்-5 ப்ரோ போன்றே குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 SoC ப்ராசசரைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொருத்தவரை பின்பக்கமுள்ள இரட்டை கேமராக்கள் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சாரும், 5 மெகாபிக்சல் கொண்ட இரண்டாவது சென்சாரும் உள்ளன. செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்கு 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. 4000mAh பேட்டரி.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்