Redmi, Oppo என ஒரே வாரத்தில் 4 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 22 ஆகஸ்ட் 2020 11:21 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ரெட்மி 9 புதிய மாடலாக வருகிறது
  • ஒப்போ A53 2020 ரூ.15,000க்குள்ளாக இருக்கலாம்
  • ஜியோனி மேக்ஸில் 6.1 இன்ச் திரை உள்ளது

ஒப்போ A53 2020 மற்றும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது உறுதி

இந்தியாவில் அடுத்த வாரத்தில் மட்டும் நான்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அவை என்னென்ன ஸ்மார்ட்போன்கள், என்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம். 

மோட்டோ, ஒப்போ, ஷாவ்மி  நிறுவனங்களிடம் இருந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்றவாறு ஒரே வாரத்தில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது.. இவற்றில் மோட்டோ மட்டும் இந்தியாவில் அதன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறதா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒப்போ மற்றும் ஷாவமி நிறுவனம் முறையே ஒப்போ A53 2020 மற்றும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. இதே போல் ஜியோனி தரப்பிலும் ஜியோனி மேக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. 

ரெட்மி 9

ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதில் பின்பக்கத்தில் டூயல் கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், ஆண்ட்ராய்டு 10, MIUI 12 உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி அத்துடன் 10W ஃபாஸ்ட் சார்ஜர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ A53 2020

ஒப்போ தரப்பில் ஒப்போ  A53 2020 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதன் விலை 15 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுமாகிறது. இதில், 6.5 இன்ச் அளவிலான திரை, ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 SoC பிராசசர், 16 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஜியோனி மேக்ஸ்

ஒரிரு வருங்களுக்கு முன்பு ரெட்மிக்குப் போட்டியாக ஜியோனி வளர்ந்து வந்தது. இந்த நிறுவனம் தற்போதும் மீண்டும் புதுஎழுச்சியுடன் ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வர முயற்சிக்கிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிகம் செய்கிறது.  இது வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் 

இந்தியாவில் மோட்டோரோலா தரப்பில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார், டைப் சி போர்ட் இருப்பதாக டீஸ் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் பெயர், மாடல் விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் மோட்டோ E7 பிளஸ் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Well built
  • Good battery life
  • Bad
  • Mediocre camera performance
  • Bloatware and spam in MIUI
  • Laggy Android experience
  • Not great value
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G35
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 9, Oppo A53 2020, Redmi, Xiaomi, Motorola
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.