இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.
கடந்த ஜூன் மாதம் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகமானது
ரெட்மியின் 9 ஸ்மார்ட்போன் 9A அல்லது 9C என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் இது ரெட்மி 9A அல்லது ரெட்மி 9C என்ற பெயரில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரெட்மி இந்தியாவின் சிஇஓ மனு குமார் ஜெயின் டீஸ் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்மார்ட்போனின் 9 என்ற எண்னை மட்டும் டீஸ் செய்துள்ளார்.. அது ரெட்மி 9A ஆக இருக்கலாம் அல்லது ரெட்மி 9C ஆக இருக்கலாம்.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. மலேசியாவில் கடந்த ஜன் மாதம் ரெட்மி 9A மற்றும் ரெட்மி 9C ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, அதே போல் 9A அல்லது 9C என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2️⃣0️⃣2️⃣0️⃣ is the YEAR of 9️⃣! ????
— Manu Kumar Jain (@manukumarjain) August 19, 2020
This is how my 2020 looks like: ????
✅ 12th March: #RedmiNote9ProMax & #RedmiNote9Pro
✅ 20th July: #RedmiNote9
✅ 4th August: #Redmi9Prime
❓ XX XXX, 2020: #Redmi _ ?
Where is the 9️⃣❓ Guess what's next? RT & gear up for 9️⃣! ????#Xiaomi ❤️ #Redmi pic.twitter.com/GVWJTacXov
ரெட்மி 9 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகுமு் என்பது அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மலேசியாவில் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போன் MYR 359 (இந்திய மதிப்பில் ரூ. 6,300) விலைக்கு அறிமுகமானது. அதே போல், தான் இந்தியாவிலும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ரெட்மி 9C ஸ்மார்ட்போன் MYR 429 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,500) விலைக்கு மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெட்மி 9C மற்றும் ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.53 இன்ச் திரை, டூயல் சிம் ஸ்லாட் இருக்கலாம். ரெட்மி 9C ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G35 SoC பிராசசரும் , ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G25 SoC பிராசரும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Moto Buds 2 Fusion India Launch Date Announced; Key Specifications Teased