இந்தியாவில் Redmi 9 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்! எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 20 ஆகஸ்ட் 2020 12:49 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 9C ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G35 SoC பிராசசர்
  • ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G25 SoC பிராசசர்
  • இரண்டு போன்களிலும் 5,000mAh கொண்ட பேட்டரி

கடந்த ஜூன் மாதம் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகமானது

ரெட்மியின் 9 ஸ்மார்ட்போன் 9A அல்லது 9C என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் இது ரெட்மி 9A அல்லது ரெட்மி 9C என்ற பெயரில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக ரெட்மி இந்தியாவின் சிஇஓ மனு குமார் ஜெயின் டீஸ் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்மார்ட்போனின் 9 என்ற எண்னை மட்டும் டீஸ் செய்துள்ளார்.. அது ரெட்மி 9A ஆக இருக்கலாம் அல்லது ரெட்மி 9C ஆக இருக்கலாம். 

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. மலேசியாவில் கடந்த ஜன் மாதம் ரெட்மி 9A மற்றும் ரெட்மி 9C ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, அதே போல் 9A அல்லது 9C என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகுமு் என்பது அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

Redmi 9A, Redmi 9C விலை

மலேசியாவில் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போன் MYR 359 (இந்திய மதிப்பில் ரூ. 6,300) விலைக்கு அறிமுகமானது. அதே போல், தான் இந்தியாவிலும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ரெட்மி 9C ஸ்மார்ட்போன் MYR 429 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,500) விலைக்கு மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

Redmi 9A, Redmi 9C சிறப்பம்சங்கள்

ரெட்மி 9C மற்றும் ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.53 இன்ச் திரை, டூயல் சிம் ஸ்லாட் இருக்கலாம். ரெட்மி 9C ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G35 SoC பிராசசரும் , ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G25 SoC பிராசரும் எதிர்பார்க்கப்படுகிறது.  இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G35
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பிளேஸ்டேஷன் கேம்களில் ரசிகர்களின் முகங்களை ஸ்கேன் செய்து சேர்க்க 'பிளேயர்பேஸ்' திட்டத்தை சோனி அறிவித்துள்ளது
  2. ஒப்போ F33 புரோ 5ஜி மற்றும் ஒப்போ F33 5ஜி இந்திய அறிமுகத் தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் நிறங்கள் வெளியீடு
  3. விவோ T5 ப்ரோ 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; 9,020mAh பேட்டரி இருப்பது உறுதி
  4. ஒன்பிளஸ் நோர்ட் 6 இந்தியாவில் Snapdragon 8s Gen 4 SoC, 9,000mAh பேட்டரியுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  5. விவோ X500 ப்ரோ மேக்ஸ் அடுத்த தலைமுறை சோனி கேமரா சென்சாரைக் கொண்டிருக்கும் எனத் தகவல்
  6. சோனி 'The ColleXion' 1000X-சீரிஸ் ஹெட்போன்களைத் தயாரிப்பதாகத் தகவல்; விலை மற்றும் வெளியீட்டுத் தேதி கசிந்தது
  7. ஒன்பிளஸ் நார்டு 6 vs ரெட்மி நோட் 15 ப்ரோ+ vs நத்திங் 4ஏ ப்ரோ: இந்தியா விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஓர் ஒப்பீடு
  8. ஜிஎஸ்டி (GST) பதிவை ஆன்லைனில் ரத்து செய்யும் முறை: முழுமையான விளக்கம்
  9. வருமான வரி தாக்கல் செய்யும் காலம் வந்தாச்சு: நீங்கள் தயாராக ChatGPT உதவும் 7 வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
  10. குழந்தைகளுக்கான கேம்கள் மற்றும் ஊடாடும் உள்ளடக்கங்களுடன் நெட்ஃபிக்ஸ் பிளேகிரவுண்ட் ஆப் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.