வாடிக்கையாளர்கள் அறிமுக நிகழ்வை ரெட்மியின் யூடியூப் பக்கத்தில், இன்று மதியம் 12 மணிக்கு நேரலையாகப் பார்க்கலாம்.
இன்று மதியம் 12 மணிக்கு ரெட்மி 9A அறிமுகம்
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9A ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகிறது.
இந்தியாவில் இன்று (செப்.2) ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது. ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம் ஆகிய ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ஸ்மார்ட்போனாக ரெட்மி 9A அறிமுகமாகிறது.
இதில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ணமுன்னதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரெட்மி 8A அறிமுகமானது. அதேபோன்று இந்தாண்டு தற்போது செப்டம்பர் மாதம் ரெட்மி 9A அறிமுகம் செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் அறிமுக நிகழ்வை ரெட்மியின் யூடியூப் பக்கத்தில், இன்று மதியம் 12 மணிக்கு நேரலையாகப் பார்க்கலாம்.
மலேசியாவில் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போன் MYR 359 (இந்திய மதிப்பில் ரூ. 6,300) விலைக்கு அறிமுகமானது. அதே போல், தான் இந்தியாவிலும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ரெட்மி 9C ஸ்மார்ட்போன் MYR 429 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,500) விலைக்கு மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.53 இன்ச் திரை, டூயல் சிம் ஸ்லாட் இருக்கலாம். மீடியாடெக் ஹீலியோ G25 SoC பிராசரும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பொருத்தவரையில், முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா இருக்கலாம். பின்பக்கத்தில் 13MP பிரைமரி கேமராவும், 5MP வைட் ஆங்கிள் கேமராவும் இருக்கலாம்.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications