4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மொத்தம் இரண்டு வேரியன்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்
விரைவில் அறிமுகமாகும் ரெட்மி 9i
இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் சீரிஸில் புதிதாக ரெட்மி 9i என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மி நிறுவனத்தின் ரெட்மி 9 சீரிஸில் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளன. அண்மையில் ரெட்மி 9 பிரைம் அறிமுகம் செய்த பிறகு, தற்போ ரெட்மி 9A ஸ்மார்ட்போன் பற்றிய டீசர்கள் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது ரெட்மி 9 சீரிஸில் புதிதாக ரெட்மி 9i என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இதுகுறத்து பிரைஸ் பாபா என்ற தளத்தில் வெளியான தகவலின்படி, ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக, ரெட்மி 9i இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மொத்தம் இரண்டு வேரியன்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம். மொத்தம் 3 விதமான நிறங்களில் ரெட்மி 9i ஸ்மார்ட்போன் அறிமுகமாகல் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 9i ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
பிராசசர்: ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலீயோ
பேட்டரி சக்தி : 5,000mAh
சார்ஜிங் ஆதரவு: 10W .
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Tom Clancy's Ghost Recon: Future Soldier Is Free to Claim on Ubisoft Store for a Week
Amazon Great Freedom Sale 2026: Best Deals on Refrigerators from Haier, LG, Samsung and More Brands