கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது குறைந்தவிலை ஸ்மார்ட்போனான ரெட்மி 5ஏ –ஐ சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஃப்ளாஷ் சேல் விற்பனையின் போது ஏற்படும் தொந்தரவுகள் இன்றி முன்பதிவு செய்து வாங்கும் முறை இன்று பிற்பகல் 12 மணிக்கு MI.com தளத்தில் தொடங்குகிறது. இதன்படி முழுப்பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், அடுத்த ஐந்து வேலை நாட்களுக்குள் ரெட்மி 5ஏ தங்கள் முகவரிக்கே வந்து சேரும். இது தவிர வாராந்திர ஃப்ளாஷ் சேல்களும் MI.com & ஃப்ளிப்கார்ட் தளங்களில் நடத்தப்படுகிறது.
16 ஜிபி இன்டர்னல் மெமரி-2ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி - 3ஜிபி ரேம் ஆகிய இரண்டு வகையான 5ஏ போன்கள் கிடைக்கின்றன. இவை முறையே 5999 ரூபாய் மற்றும் 6999 ரூபாய்க்கு கிடைக்கின்றன. அந்த வகையில் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன் மாடலாக இது விளங்குகிறது.
நீலம், தங்க நிற மஞ்சள், சாம்பல், ரோஸ் கோல்ட் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கும்.
பிளிப்கார்ட், mi.com ஆகிய தளங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கும். சியோமி நிறுவனத்தின் தளமான Mi.com வழியாக வாங்குவோர்க்கு மூன்று மாத ஹங்காமா இசைச் சந்தாவும், ஜியோவின் 2200 ரூபாய்க்கான கேஷ்பேக்கும் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் 549க்கான சேதாரப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது
ரெட்மி 5ஏ ஐந்து அங்குல (720*1280) திரையைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு நூகட், MIUI 9 ஆகியவற்றில் இயங்குவதோடு விரைவில் MIUI 10 அப்டேட் வர இருக்கிறது. க்வால்காம் 425 SoC ப்ராஸசரைக் கொண்டுள்ளது.
ரியர் சென்சார், f/2.2 அப்பர்ச்சர் எல்ஈடி ஃப்ளாஷ், பிடிஏப் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பின்பக்க கேமரா. முன்பக்கத்தில் f/2.0 அப்பர்ச்சருடன் கூடிய 5 மெகா பிக்சல் கேமரா. எட்டு நாட்கள் வரை நீடிக்கக் கூடிய 3000mAh பேட்டரி.
4G Volte, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்/ A-GPS, இன்பிராரெட், மைக்ரோ USB, 3.5 மிமீ ஜாக் ஆகிய கனக்டிவிட்டி ஆப்சன்களையும் உள்ளடக்கியுள்ளது. ப்ராக்சிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்சலரோமீட்டர் ஆகிய அம்சங்களையும் ரெட்மி 5A கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்