பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனம் சையோமியின் கிளை பிராண்டு போக்கோவின் முதல் ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியாக உள்ளது.
போக்கோ எஃப்1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஆக்ஸ்டு மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்று போக்கோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
64 ஜிபி, 128 ஜிபி என்று இரண்டு ஸ்டோரேஜ் அளவுகளுடன் போக்கோ எஃ1 போன் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 36,400 ரூபாய்க்கு போக்கோ எஃப்1 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், போக்கோ எஃப்1 ஸ்மார்ட் போன் குறித்த மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 6.18 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC, ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது என்று பெலாரூசியன் ஆன்லைன் ஸ்டோர் கணித்துள்ளது. மேலும், 4,000mAh பேட்டரியுடன், டூயல் கேமரா, 12 மெகா-பிக்சல் ப்ரைமரி, 5 மெகா-பிக்சல் செகண்டரி கேமரா கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம், ஐரோப்பிய சந்தையில் முதலில் வெளியாக இருக்கும் போக்கோ எஃப்1 ஸ்மார்ட் போன், ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்