ஓப்போ, சியோமியின் 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'-வா, அது எப்படி இருக்கும்?

ஓப்போ, சியோமியின் 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'-வா, அது எப்படி இருக்கும்?

புதிய தொழில்நுட்பமாக 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'

ஹைலைட்ஸ்
  • 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' பற்றி ஓப்போ நிறுவனம் வெய்போவில் பதிவிட்டுள்ளது.
  • சியோமி நிறுவனமும் ஒரு டீசரை வெளியிட்டுள்ளது.
  • சாம்சங் நிறுவனமும் இந்த தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தலாம்
விளம்பரம்

ஸ்மார்ட்போன்களில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள், புதுப்புது மேம்பாடுகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு கேமரா போனை காண்பதே அதிசயம். ஆனால் தற்போதைய நிலையே வேறு. 48 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன்களை, தங்களின் பைகளில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கிறோம். 2 மெகாபிக்சல் கேமரா போனே அதிசயமாக இருந்தது. இப்போது அந்த கேமராவின் பயணம் 48 மெகாபிக்சல்களை தொட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் 60வதுகளையும் தொட இருக்கிறது, இந்த கேமராக்களின் மெகாபிக்சல். செல்பி என்றால் என்னவென்று அறியாத நாம், தற்போது, 20 மெகாபிக்சல், 25 மெகாபிக்சல் கேமராக்களில் செல்பி எடுக்கிறோம். இந்த செல்பி கேமராவின் பயணம், முதலில் முன்புறத்தின் ஒரு பெரிய பகுதியாக துவங்கியது. பின், அதன் அளவை குறைத்து டிஸ்ப்லேவிற்கு அதிக இடமளிக்க நாட்ச் டிஸ்ப்லே, ஹோல்-பன்ச் டிஸ்ப்லே என புதுப்புது மேம்பாடுகள், முன்புறத்தின் முழுப்பகுதியை டிஸ்ப்லேவிற்கு அளிக்க பாப்-அப் கேமராவென புதிய கண்டுபிடிப்பு. இன்னும் இந்த பயணம் நீள்கிறது. அதன் ஒரு பகுதி தான், தற்போது ஓப்போ மற்றும் சியோமி நிறுவனங்களில் புதிய அறிமுகமான 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'. இந்த கேமரா எங்குள்ளது, எப்படி செயல்படுகிறது?

கண்ணுக்கே தென்படாத இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' போனிற்கு முன்புறத்தில் உள்ள டிஸ்ப்லேவின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், டிஸ்ப்லேவின் அளவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஸ்மார்ட்போனின் முன்புறம் முழுவதும் டிஸ்ப்லே தான். இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'வின் செயல்பாடுகள் அடங்கிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது ஓப்போ மற்றும் சியோமி நிறுவனங்கள். இனி நாட்ச் டிஸ்ப்லே ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' இருக்கும்.

முன்னதாக, ஓப்போ நிறுவனத்தின் துணை செயலரான ப்ரைன் சென் தனது வெய்போ பக்கத்தில் இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'வுடன் செயல்பாட்டை காண்பிப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டார். மேலும்,"நாட்ச் இல்லாத டிஸ்ப்லேவை விரும்புவோர்க்கு ஒரு புதிய ஸ்மார்ட்போன் அனுபவம் காத்திருக்கிறது - ஆச்சரியத்திற்கு தாயாராக இருங்கள்.", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சியோமி நிறுவனமும், இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' குறித்த டீசரை வெளியிட்டுள்ளது. அந்த டீசரில்," வருங்காலத்தை பார்க்க வேண்டுமா, 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' தொழில்நுட்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது சியோமி நிறுவனம்" என்று முன்னதாக சியோமி நிறூவனத்தால் வெய்போவில் பகிரப்பட்ட இந்த பதிவு, பின்னர் ட்விட்டரிலும் பகிரப்பட்டது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Xiaomi, Android
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »