சியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக பவர் பேங்கை வெளியிட முடிவெடுத்துள்ள நிலையில், சீனாவில் எம்.ஐ பவர் பேங்க் 3 புரோ என்ற பெயரில் புதிய பவர் பேங்க் ஒன்று வெளியாகி இருக்கிறது. 20,000 mAh பவர் வசதி கொண்ட இந்த பவர் பேங்க் ஒரு புறம் வழியாக பவர் பேங்க்கில் மின்சாரத்தை ஏற்றிக்கொண்டே மறுபுறம் போனிலும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் யு.எஸ்.பி டைப்-சி மாடல் 45 வாட்ஸ் வேக மின்சாரத்துடன் போனை வேகமாக சார்ஜ் செய்ய உதவும். இரண்டு சாதாரண வகை யு.எஸ்.பி டைப் ஸ்லாட்களுடன் இந்த பவர் பேங்க் வெளியாகியுள்ளது.இந்த வகை பவர் பேங்க் போன்களுக்கு மட்டுமல்லாமல், டேப், லேப்டாப் மற்றும் ஆப்பிள் மேக் புக் புரோ மற்றும் குகூள் பிக்சல் புக் என எல்லாவற்றையும் சார்ஜ் ஏற்ற உதவும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. லித்தியம் மற்றும் பாலிமரால் செய்யப்பட்ட இந்த பவர்பாங்கின் பேட்டரி சர்கியூட் சிப்புடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சிப்பின் மூலம் அதிக நேர சார்ஜ் செய்வதின் பாதிப்பை குறைக்க முடிகிறது.
மேலும் சுமார் 11 மணி நேரத்திற்குள் முழு சார்ஜை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும், 45 வாட்ஸ் மின்சார வசதியுடன் சார்ஜ் செய்தால் 4 ½ மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என நம்படுகிறது.
கருப்பு நிற வண்ணத்தில் மேட் ஃவினிஷ் கோட்டிங்குடன் இந்த பவர் பேங்க் ரூபாய் 2,000க்கு வரும் ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சியோமி பவர் பேங்குடன் போட்டியிடும் வகையில் ஓப்போ நிறுவனம் தனது 50 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியுடன் கூடிய சூப்பர் விஓஓசி பவர் பேங்கை ரூபாய் 4,050 விற்பனை களத்தில் இறக்க முடிவெடுத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்