சியோமி எம்.ஐ பிளே ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகமானது. இது பிளே சரீஸில் அறிமுகமாகும் முதல் போனாகும். முந்தைய சியோமி எம்.ஐ பிளே ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச் கொண்டிருந்தது. இந்த போனின் பின்பக்கம் கிரேடியன்ட் பினிஷ் கொண்ட கண்ணாடி போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ p35 மற்றும் பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது.
சியோமி எம்.ஐ பிளே விலை,
சியோமி எம்.ஐ பிளே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்/ 64ஜிபி நினைவகம் கொண்ட வேரியண்ட்டின் சீன விலையானது, CNY 1,099 (தோராயமாக ரூ.11,000 ஆகும்). இந்த போன் பிளாக், ப்ளூ, மற்றும் கோல்ட் கலர்களில் கிடைக்கிறது.
சீனாவில் உள்ள சியோமி ஆஃப்லைன் ஸ்டோர்களில் எம்.ஐ பிளே ஸ்மார்ட்போன்கள் வரும் 25ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிகிறது. 12 மாதங்களுக்கு 10ஜிபி டேட்டா இதனுடன் இலவசமாக வழங்கப்படுகிறது.
சியோமி எம்.ஐ பிளே சிறப்பம்சங்கள்,
டூயல் சில் கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 5.84 இன்ச் புல் எச்.டி (1080x2280 பிக்செல்ஸ்) டிஸ்பிளே மற்றும் 19.9 அக்சப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ p35 மற்றும் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது.
கேமாரவை பொருத்தவரை பின்பக்கம் 12 மெகா பிக்ஸெல்ஸ் பிரைமெரி சென்சார் f/2.2 அப்பர்சர் மற்றும் 2 மெகா பிக்செல்ஸ் செகண்டரி சென்சார் என டூயல் கேமரா கொண்டுள்ளது. இதனுடன் எல்இடி பிளாஷூம் உள்ளது. முன் பக்கம் 8 மெகா பிக்செல்ஸ் சென்சார் கொண்டுள்ளது. யூஎஸ்பி டைப்- சி சார்ஜிங் கொண்ட இந்த போனில் 3,000 mAh பேட்டரி கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்