தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சியோமி நிறுவனம், ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் Mi.com ஆகிய தளங்களில் 3 நாட்களுக்கு Mi சேல் 2019' ஒன்றை அறிவித்துள்ளது. இந்த துவங்கிய இந்த விற்பனை ஜூலை 25 வரை நடைபெறவுள்ளது. அமேசான் தளத்தில் இந்த விற்பனைக்கென பிரத்யேகமாக ஒரு பக்கமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் Mi.com ஆகிய தளங்கள் எஸ்.பி.ஐ கார்டுகளுக்கு 5 சதவிகித தள்ளுபடியையும் வழங்கவுள்ளது. ரெட்மீ 7, ரெட்மீ நோட் 7S, ரெட்மீ நோட் 7 Pro, ரெட்மீ 6A, ரெட்மீ Y3, Mi A2, ரெட்மீ 6 Pro, என பல ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் சலுகையை பெற்றுள்ளது.
அமேசான் தளத்தில் 2GB RAM + 32GB சேமிப்பு அளவு ரெட்மீ 7 ஸ்மார்ட்போன் 7,499 ரூபாய் என்ற விலையிலும், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போன் 8,499 என்ற விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 500 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது.
1000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 3GB RAM + 32GB சேமிப்பு அளவு ரெட்மீ Y3 8,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு ரெட்மீ Y3 10,999 ரூபாய் என்ற விலையிலும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Mi A2 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 11,999 ரூபாய் என்ற விலையிலிருந்த 4GB + 64GB சேமிப்பு அளவு Mi A2-வின் விலை 9,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 6GB + 128GB சேமிப்பு Mi A2 15,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது.
6,999 ரூபாயிற்கு பதில் 6,199 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது 2GB RAM + 32GB சேமிப்பு ரெட்மீ 6A. 4GB RAM + 64GB சேமிப்பு கொண்ட ரெட்மீ 6 Pro, 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது. ரெட்மீ நோட் 5 Pro-வும் சலுகை பெற்று 11,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது. 3GB RAM + 64GB சேமிப்பு ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய்க்கு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில், சமீபத்தில் அறிமுகமான ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போனும் 1,000 ரூபாய் சலுகையை பெற்றுள்ளது. 3GB/ 32GB வகை 9,999 ரூபாயிலும், 4GB/ 64GB வகை 11,999 ரூபாயிலும் விற்பனையாகிறது.
மேலும் இந்த விற்பனையில் போகோ F1 ஸ்மார்ட்போன்கள் 8,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறவுள்ளது.
இந்த விற்பனையில் ஒரு பகுதியாக ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இன்று மதியத்திலிருந்து Mi.com தளத்தில் முழு நேர விற்பனைக்கு வந்துள்ளது. இந்த முழு நேர விற்பனையில் இணைந்துள்ள ரெட்மீ நோட் 7 Pro-வும் Mi.com மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனையாகவுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 5 ரூபாய் ஃப்ளாஷ் சேலையும் ஏற்பாடு செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த சேலில் ரெட்மீ நோட் 7 Pro, ரெட்மீ Y3, ரெட்மீ கோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்