இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது.
'Mi A3' ஸ்மார்ட்போன் அமேசான் Mi தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது
அண்ட்ராய்ட் ஒன் அமைப்புடன் 3 பின்புற கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி பிராசஸர், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் என பல அட்டகாசமான சிறப்பம்சங்களை கொண்ட "Mi A3" ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகியுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ஸ்பெய்னில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இதன் சிறப்பம்சங்கள் அனைவருக்கும் தெரிந்த நிலையில், "Mi A3" ஸ்மார்ட்போனின் இந்தியாவில் என்ன விலை, எப்போது விற்பனை என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையிலும், 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 15,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Not Just Blue), வெள்ளை (More Than White), மற்றும் சாம்பல் (Kind of Grey) என மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
அமேசான், Mi தளங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 23 அன்று, மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அறிமுக சலுகையாக, HDFC கிரடிட் கார்டுகளுக்கு 750 ரூபாய் கேஷ்-பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720x1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch