M1906F9SH மாடல் நம்பர் கொண்ட ஒரு சியோமி ஸ்மார்ட்போன், அமெரிக்க கூட்டு தகவல் தொடர்பு ஆணையத்தின் தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, சியோமி நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், அண்ட்ராய்ட் ஒன் அமைப்பு கொண்ட அந்த ஸ்மார்ட்போன் 'Mi A3' ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனிற்கு அங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாடல் நம்பர், 'Mi CC9e' ஸ்மார்ட்போன் மாடல் நம்பருடன் ஒத்துப்போகிறது. இதனால், சீனாவில் அறிமுகமான இந்த 'Mi CC9e' ஸ்மார்ட்போன்தான் உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சென்ற வாரம் 'Mi CC9e' ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் ஒன் அமைப்புடன் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமெரிக்க கூட்டு தகவல் தொடர்பு ஆணையம் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, சீனாவில் வெளியான 'Mi CC9e' ஸ்மார்ட்போன் போலவே உள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட புகைப்படத்தில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் ஒன் அமைப்பு கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த படத்தின் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி , இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் அளவுகளான 153mm நீளமும், 71mm அகலமும், 'Mi CC9e' ஸ்மார்ட்போனுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் தொடர்பு ஆணையத்தின் தளத்தில் இடம்பெற்றிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர், M1906F9SH. அதே சமையம், கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான 'Mi CC9e' ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர், M1906F9SC. இந்த இரண்டு ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர்கள் இடையே சிறிய வேறுபாடுகளே உள்ளன.
முன்னதாக, சியோமி நிறுவனம் தனது வெய்போ கணக்கில் வெளியிட்ட சில 'Mi CC9e' ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்களில் 'laurel_sprout' என்ற குறீயிட்டு பெயரை பயன்படுத்தி இருந்தது. அதே நேரம், கீக்பென்ச் (Geekbench) தனது தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு 'laurus' என்ற குறியீட்டு பெயரை பயன்படுத்தியுள்ளது. சதரனமாக, ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போன்களின் குறீயிட்டுப்பெயர்கள் '_sprout' என்ற பின்பெயரை கொண்டிருக்கும். மீண்டும், இது Mi CC9e' ஸ்மார்ட்போன்தான் உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது என்பதை குறிப்பிடுகிறது.
இவை அனைத்தும், Mi CC9e' ஸ்மார்ட்போன்தான் உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனாக வெளியாகலாம் என்பதை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. ஆனால், இது குறித்து சியோமி நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்