எக்ஸியோமி எம் ஐ 2 மற்றும் எம் ஐ 2 லைட் ஆகிய இரு போன்கள் விரைவில் வெளியாக உள்ளது
எக்ஸியோமி நிறுவனத்தின் வெளியீடாக புதிய மாடல் போன்கள் எக்ஸியோமி எம் ஐ 2 மற்றும் எம் ஐ 2 லைட் ஆகிய இரு போன்கள் விரைவில் வெளியாக உள்ளது.
வருகிற ஜூலை 24ம் தேதி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடக்க உள்ள அறிமுக விழாவில், இந்த இரு போன்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், போலாந்து நாட்டின் எக்ஸ்காம் போர்ட்டல் என்கிற இணையதளத்தில் இந்த இரு மாடல் போன்களின் படங்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸியோமியின் இந்த எம் ஐ 2 மற்றும் எம் ஐ 2 லைட் ஆகிய இந்த இரு போன்களும் ஆப்பிள் 10 வடிவமைப்பை ஒத்துள்ளது. குறிப்பாக எம் ஐ 2 லைட் மாடலின், 5.84 இன்ச் டிஸ்பிளே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 4000 mAH பேட்டரி,ஸ்னாப்ட்ராகன் 625 எஸ்ஓசி பிராசசர், 4 ஜிபி ரேம் மெமரி மற்றும் 62 ஜிபி மெமரி கொண்டுள்ளது. பின்புறம் 12 மெகாபிக்ஸல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸல் கேமராவும் கொண்டுள்ளது. இந்த மாடலின் விலை 18,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Instagram Rolls Out New AI Voice Effects For Voice Notes With Eight Filters
Oppo Watch X3 With Snapdragon W5 Chipset, Over 100 Sports Modes Launched