Mi 10 Youth Edition 5G-யின் 6 ஜிபி + 64 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,099 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.22,500) ஆகும். இந்த போன் சீனாவில் ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு வருகிறது.
Mi 10 Youth Edition 5G நான்கு கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்
Xiaomi Mi 10 Youth Edition 5G சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் முன்புறத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உடன் வருகிறது. போனின் முக்கிய அம்சங்களில் ஸ்னாப்டிராகன் 765G SoC, இரட்டை முறை சஸ்பென்ஷன் திரவ குளிரூட்டல் மற்றும் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பு மற்றும் 4,160 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை அடங்கும். இந்த போன் ஏப்ரல் 30-ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும்.
Mi 10 Youth Edition 5G-யின் 6 ஜிபி + 64 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,099 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.22,500),
6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,299 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.24,700),
8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,499 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.26,900)
டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,799 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.30,100) ஆகும்.
இந்த போன் Black Skill Storm, Blueberry Mint, Four Seasons Spring Milk Green, Peach Grapefruit மற்றும் White Peach Oolong கலர் ஆப்ஷன்களில் சீனாவில் ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு வருகிறது.
Xiaomi Mi 10, Mi 10 Pro With 108-Megapixel Quad Camera Setup, Snapdragon 865 Launched
இந்த போன் டூயல்-சிம் ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஓஎஸ்-ல் இயங்குகிறது. இந்த போன் 6.57 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது அட்ரினோ 620 ஜி.பீ.யு மற்றும் 8 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு, ஸ்னாப்டிராகன் 765G 5G ஆக்டா கோர் செயலி (1x2.4GHz, 1x2.2GHz, 6x1.80GHz) மூலம் இயக்கப்படுகிறது.
போனின் குவாட் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-க்ளியர் பிரதான கேமராவும், 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் அடங்கும். மூன்றாவது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மற்றொரு சுயாதீன மேக்ரோ லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
இந்த போன், 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. போனில் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,160 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 164.02x74.77x7 மிமீ அளவு மற்றும் 192 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Sasivadane Now Streaming on Amazon Prime Video: Everything You Need to Know
Kuttram Purindhavan Now Streaming Online: What You Need to Know?
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India