இந்தியாவில் எம்ஐ 10 வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய எம்ஐ-சீரிஸ் ஃபிளாக்ஷிப் மார்ச் 31-ஆம் தேதி அறிமுகமாகும் என்று ஷாவ்மி வியாழக்கிழமை நாட்டின் சமூக வலைத்தள சேனல்கள் மூலம் அறிவித்தது. சமூக ஊடக தளங்கள் மற்றும் ஷாவ்மியின் எம்ஐ.காம் தளம் மூலம் நடைபெறும் ஒரு நேரடி ஒளிபரப்பிற்கான ஊடக அழைப்புகளையும் நிறுவனம் அனுப்பியது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஐ 10 ப்ரோவுடன் இணைந்து அறிமுகமான எம்ஐ 10-ன் உலகளாவிய அறிமுகமான மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தியா வெளியீடு குறிப்பிடத்தக்கதாகும். பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம், எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 ப்ரோ இரண்டையும் இந்திய சந்தைக்குக் கொண்டுவருவதாக முன்னர் ஊகிக்கப்பட்டது. இருப்பினும், புதிய டீஸர்கள் எம்ஐ 10 மட்டுமே நாட்டிற்கு செல்லும் என்று கூறுகின்றன.
ட்விட்டரில் எம்ஐ இந்தியா கணக்கு ஆரம்பத்தில் இந்தியாவில் Mi 10 அறிமுகப்படுத்தப்பட்ட தேதியை வெளிப்படுத்தியது. ட்வீட்டிற்குப் பிறகு, Xiaomi ஊடக அழைப்பிதழ்களை அனுப்பியது, இது மதியம் 12:30 மணிக்கு திட்டமிடப்பட்ட லைவ்ஸ்ட்ரீம் மூலம் நடத்தப்படும். புதிய வெளியீட்டைச் சுற்றி சில அதிர்வுகளை உருவாக்க ஒரு பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் மார்ச் 31-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் புதிய போனின் முன்கூட்டிய ஆர்டர்களை எடுக்கத் தொடங்கும்.
மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை இந்தியாவில் எம்ஐ 10-ஐ முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளில் உடனடி தள்ளுபடியாக ரூ.2,500 பெறலாம் என்று மைக்ரோசைட் வெளிப்படுத்தியது. இதேபோல், ஆக்சிஸ் வங்கி டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கினால் உடனடி தள்ளுபடியாக ரூ.2,000 பெறலாம்.
இந்தியாவில் எம்ஐ 10-ன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், நேரடி இறக்குமதி, அதிக ஜிஎஸ்டி மற்றும் ரூபாயின் மதிப்பு குறைவதால் கடந்த மாதம் சீனாவில் அறிவிக்கப்பட்டதை விட வித்தியாசமான விலை மாதிரி இருக்கும் என்று ஷாவ்மி துணைத் தலைவரும், இந்திய நிர்வாக இயக்குநருமான மன்குமார் ஜெயின் இந்த வார தொடக்கத்தில் உறுதிப்படுத்தினார். சீனாவில் எம்ஐ 10-ன் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,400)-ல் தொடங்குகிறது.
ஷாவ்மி எம்ஐ 10 உடன் Mi 10 Pro-வைக் கொண்டுவந்தது. இருப்பினும், முந்தையது இந்திய சந்தையில் வர வாய்ப்பில்லை, ஏனெனில் நிறுவனம் தனது சமீபத்திய சமூக ஊடக பதிவின் மூலம் வழக்கமான எம்ஐ 10 மாடலை மட்டுமே கிண்டல் செய்துள்ளது. டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவும் ஒரு எம்ஐ-சீரிஸ் ஃபிளாக்ஷிப் மட்டுமே இருக்கும் என்று கூறினார்.
இவ்வாறு கூறப்பட்டால், எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 ப்ரோ மார்ச் 27 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த நிகழ்வு ஷாவ்மியின் அதிகாரப்பூர்வ உலகளாவிய ட்விட்டர், யூடியூப் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
எம்ஐ 10 ஆனது MIUI 11 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.67 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) வளைந்த AMOLED டிஸ்பிளேவை, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 256 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது.
எம்ஐ 10, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவுடனும் வருகிறது.
30W வயர்டு சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,780 எம்ஏஎச் பேட்டரியை எம்ஐ 10 பேக் செய்கிறது. புதிய எம்ஐ-சீரிஸ் போனின் பிட்சை அமைப்பதற்காக நிறுவனம் சமீபத்தில் தனது 10000எம்ஏஎச் எம்ஐ வயர்லெஸ் சார்ஜரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்