ஷாவ்மி, தனது முதன்மை போனான எம்ஐ 10-ஐ மார்ச் 31-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருந்தது.
எம்ஐ 10 சீனாவில் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டதை அடுத்து, ஷாவ்மி தனது முதன்மை எம்ஐ 10 போனை இந்தியாவில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. நிலைமையை மதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட வெளியீட்டு தேதியை விரைவில் வெளியிடுவதாக நிறுவனம் கூறுகிறது. இந்த போன் பிப்ரவரியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது மார்ச் 31-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இருப்பினும், பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இப்போது நாட்டில் வெளியீட்டு நிகழ்வுகளை ரத்து செய்து வருகின்றனர். நாடு தற்போது 21 நாள் முழுமையான ஊரடங்கின் கீழ் உள்ளது, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இப்போது விற்க அனுமதிக்கப்படுகின்றன.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், தேசத்தை ஆதரிப்பதற்காக அதன் ஆற்றலை மையமாகக் கொண்டுள்ளது என்று Xiaomi கூறுகிறது. ஷாவ்மி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயினும் Twitter-ல் Mi 10 வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 9 Pro Max-ன் முதல் விற்பனையையும், அரசு விதித்த இயக்கம் கட்டுப்பாட்டையும் தொழில்நுட்ப நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. Redmi Note 9 Pro கடைசியாக மார்ச் 24 அன்று கிடைத்தது, அதன் பிறகு புதிய ஃபிளாஷ் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.
ஷாவ்மியைத் தவிர, ரியல்மியும் தற்போது இந்தியாவில் அதன் அனைத்து வெளியீட்டையும் நிறுத்தியுள்ளது. Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A போன்கள் நாளை அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவோ போன்ற பிராண்டுகளும் தங்களது மார்ச் வெளியீடுகளை இப்போது ஏப்ரல் மாதத்தில் மாற்றுவதாக அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?