Snapdragon 865 SoC உடன் மிக விரைவில் வருகிறது 'Mi 10'!

Snapdragon 865 SoC உடன் மிக விரைவில் வருகிறது 'Mi 10'!

Snapdragon 865 SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் போன்களில் Mi 10 ஒன்றாகும்

ஹைலைட்ஸ்
  • Snapdragon 865 SoC உடன் Mi 10 அதிகாரப்பூர்வமானது
  • Redmi K30, Snapdragon 765 SoC-ஐக் கொண்டுள்ளது
  • அடுத்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட 5Gஸ்மார்ட்போன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
விளம்பரம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2019-ன் (Qualcomm Snapdragon Tech Summit - 2019) முதல் நாளில், இரண்டு வன்பொருள் கூட்டாளர்கள் மேடையில் வந்து புதிய ஸ்னாப்டிராகன் chip-களை அடிப்படையாகக் கொண்ட 5G ஸ்மார்ட்போன்களில் வேலை செய்வதாக அறிவித்தனர். இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜியோமியின் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவர் லின் பின் (Lin Bin), நிறுவனத்தின் அடுத்த முதன்மை போனான Mi 10 இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது புதிய ஸ்னாப்டிராகன் 865 SoC-ஐ அடிப்படையாகக் கொண்ட முதல் ப்ளாஷ்கிரிப் போனாகும். இது "மிக விரைவில்" வரவிருக்கிறது. அடுத்த வாரம் வெளியிடப்படும் Redmi K30 உள்ளே Snapdragon 765 5G SoC இருக்கும். முன்னோக்கிச் செல்ல, ஜியோமி 2020-ஆம் ஆண்டில் 10 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, Xiaomi Mi எப்படி இருக்கிறது அல்லது அதன் பிற அம்சங்களைப் பற்றி பின் (Bin) அதிகம் வெளிப்படுத்தவில்லை, ஏனெனில் இது ஒரு முக்கிய குவால்காம் chip கொண்டது. CES 2020-ன் போது, ​​ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கூட Mi 10-ஐ நாம் காண முடியும். சமீபத்தில், ஒரு Weibo பதிவில் Mi 10 Pro இருப்பதை பின் (Bin) உறுதிப்படுத்தியுள்ளார்.

Redmi K30-க்கு வரும்போது, நிறுவனம் இதை டிசம்பர் 10-ஆம் தேதி அறிவிக்கத் தயாராக உள்ளது, மேலும் சமீபத்திய கசிவுகள் போன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை எங்களுக்குக் கொடுத்துள்ளன. Redmi K30 உண்மையில் புதிய ஸ்னாப்டிராகன் 765 SoC-ஐக் கொண்டிருக்கும் என்பதை பின் (Bin) இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இது, 2019-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இடைப்பட்ட 5G ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

ஓப்போவின் Alen Wu, VP மேடைக்கு வந்து 2020-ஆம் ஆண்டில் Q1-ல் ஸ்னாப்டிராகன் 865 SoC-ஐ அடிப்படையாகக் கொண்ட 5G ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று அறிவித்தனர். மோட்டோரோலாவின் தலைவர் செர்ஜியோ புனியாக் (Sergio Buniac), 2020-ஆம் ஆண்டில் ஸ்னாப்டிராகன் 765 மற்றும் ஸ்னாப்டிராகன் 865 ஆகியவற்றின் அடிப்படையில் 5G போன்களை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார். நிறுவனம் தனது முயற்சிகளை மடிக்கக்கூடிய போன்களில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார், இதன் பொருள் நாம் அதிகம் மடிக்கக்கூடிய RAZR போன்களை அடுத்த ஆண்டு காணலாம்.  கடைசியாக, ஸ்னாப்டிராகன் 765 SoC-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய நோக்கியா போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் என்று HMD குளோபலின் தலைமை தயாரிப்பு அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் (Juho Sarvikas) அறிவித்தார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »