இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை 2-ல் சீனாவில் முதல்முறையாக அறிமுகமாகவுள்ளது.
Photo Credit: Weibo
சியோமி அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்
சீனாவில் அறிமுகமாக இருக்கும் தனது புதிய 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். அதன்படி இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை 2-ல் சீனாவில் முதல்முறையாக அறிமுகமாகவுள்ளது. சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லெய் ஜுன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் இனையதளத்தில் வெளியாகியிருந்தது. ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களுடன் Mi CC9 ஸ்மார்ட்போனின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தின்படி, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் முழுவதும் திரையாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன்கள் குறித்த ஒரு டீசர் ஒன்றை வெளியிட்டு ஜூலை 2-ல் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. முன்னதாக, தனது ட்விட்டர் கணக்கில் தொழில்நுட்ப வல்லுனரான முகில் சர்மா (Mukul Sharma) இந்த ஸ்மார்ட்போனின் வகைகள் குறித்தும் அதன் விலை குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!
இவர் கூறியுள்ள தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போனின் விலை 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்). 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்ட மற்ற இரு வகைகளும் 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 3,099 யுவான்கள் (31,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!
இதனுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஸ்மார்ட்போனான Mi CC9e-யும் மூன்று வகைகளிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்ற இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899 யுவான்கள் (19,200 ரூபாய்) மற்றும் 2,199 யுவான்கள் (22,200 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த Mi CC9 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டிருக்கும். இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் 4000mAh பேட்டரி, 27W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!
இந்த Mi CC9e ஸ்மார்ட்போன் 5.97 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 3500mAh பேட்டரி, 18W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். Mi CC9 போலவே இந்த ஸ்மார்ட்போனும் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் வெளியாகலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
The Raja Saab OTT Release Reportedly Leaked Online: What You Need to Know Prabhas Starrer Movie