4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி: வருகிறது ஜியோமி ஃபிளாஷ் விற்பனை

4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி: வருகிறது ஜியோமி ஃபிளாஷ் விற்பனை
ஹைலைட்ஸ்
 • இந்தியாவில் தன்னுடைய 4ம் ஆண்டு நிறைவு விற்பனையை அறிவித்திருக்கிறது
 • ஜியோமி சேல் ஜூலை 10 - ஜூலை 12 தேதிகளில் நடக்க இருக்கிறது.
 • எல்.இ.டி டிவி 4 ரூபாய்க்கு கிடைக்கிறது

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எம்ஐ 3 ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்த ஜியோமி தற்போது நான்காம் ஆண்டு நிறைவை பல்வேறு ஆஃபர்களுடன் கொண்டாடுகிறது. அந்நிறுவனம் வருடாந்திர சிறப்பு விற்பனையை Mi.com இணையதளத்தில் ஜூலை 10ல் தொடங்கி 12 வரை நடத்துகிறது.. சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 10 முதல் 12 வரை இந்த ஆஃபர் விற்பனை கிடைக்கும். ‘எம்ஐ ரிவார்ட்’ உறுப்பினர்களுக்கு ஜூலை 9-ம் தேதி இரவு 12 மணி முதலே முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த விற்பனையின் போது வழங்கப்படும் சிறப்பு ஃபிளாஷ் சேலில் 4 ரூபாய்க்கு, எம்.ஐ எல்.ஈ.டி ஸ்மார்ட் டிவி 4 (55இன்ச்), ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் எம்ஐ பேண்ட் 2 விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. எம்ஐ மிக்ஸ் 2 மற்றும் எம்ஐ மேக்ஸ் 2 ஆகிய மாடல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

ஜியோமி எஸ்பிஐ, பேடிஎம் மற்றும் மொபிகுவிக் நிறுவனங்களுடன் இணைந்து ஆஃபர்களையும், கேஷ்பேக்குகளையும் தர இருக்கின்றது. எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு 7,500 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட பொருட்களை வாங்கும் போது 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதுபோலவே பேடிஎம் மூலம் ரூ. 8,999 வாங்குபவர்களுக்கு ரூ. 500 வரை கேஷ் பேக் கிடைக்கும். மேலும் பேடிஎம் மூலம் செய்யப்படும் விமான முன்பதிவிற்கு ரூ. 1000 கேஷ்பேக்கும், சினிமா டிக்கெட்களுக்கு ரூ. 200 கேஷ்பேக்கும் கிடைக்கும். மொபிகுவிக் மூலம் வாங்கும் பொருட்களுக்கு 25% சூப்பர் கேஷ் (அதிகபட்சம் ரூ. 3000 வரை) கிடைக்கும்

எம்ஐ ஃபிளாஷ் சேல்:

ஜியோமி நிறுவனம், 4 ரூபாய் ஃபிளாஷ் விற்பனையை ஜூலை 10, மற்றும் ஜூலை 12 வரை தினமும் மாலை 4 மணிக்கு நடத்தும். இந்த விற்பனையில் ரெட்மி ஒய்1, எம்ஐ எல்இடீ ஸ்மார்ட் டிவி 4 (55 இன்ச்), ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி ஒய்2 மற்றும் எம்ஐ பேண்ட் 2 ஆகிய அனைத்தும் நான்கு ரூபாய்க்கு பெறுகின்ற வாய்ப்புள்ளது.

சிறப்பு தள்ளுபடிகள்:

எம்.ஐ நிறைவு விற்பனையின் போது, ஜியோமி ஃபிளாஷ் சேலுடன் இணைந்து அதனுடைய சில முக்கியமான மாடல்களில் தள்ளுபடிகள் வழங்க இருக்கிறது. இந்த சேலின் கீழ் கிடைக்கும் பொருட்களின் விலைப்பட்டியல், எம்ஐ மிக்ஸ் 2 ரூ. 27999 ( எம்ஆர்பி ரூ. 29,999), எம்ஐ மிக்ஸ் 2 ரூ. 14,999 (எம்ஆர்பி ரூ. 15,999), டிராவெல் பாக்பேக் ரூ. 1,899 (எம்.ஆர்.பி ரூ. 1,999), எம்.ஐ இயர் ஃபோன்ஸ் ரூ. 649 (எம்ஆர்பி ரூ. 699), எம்ஐ பேண்ட் 2 ரூ. 1,599 (எம்ஆர்பி ரூ. 1,799). ஜியோமி ஒரு பயண காம்போவையும் அறிவித்துள்ளது, இதில் எம்.ஐ ட்ராவெல் பாக்பேக் ( ரூ. 1,999 மதிப்புள்ளது) மற்றும் எம்.ஐ செல்ஃபி டிரைபாட் (ரூ. 1,099 மதிப்பு) ஆகிய இரண்டும் ரூ. 2,948-க்கு கிடைக்கும். இதுபோலவே எம்ஐ பேண்ட் HRX (ரூ. 1,299), எம்ஐ பேண்ட் ஸ்ட்ராப் ப்ளூ (ரூ. 199) உடன் லைஃப் ஸ்டைல் காம்போவாக ரூ. 1,398- க்கு கிடைக்கும்.

குறிப்பிட்ட அளவிலான ஆஃபர்கள்:

‘ப்ளின்க் அண்ட் மிஸ்’ என்ற டீல் மூலமாக சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது ஜியோமி. இது ஜூலை 10 முதல் 12 வரை மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த விற்பனையில், ரெட்மி நோட் 5 மற்றும் எம்ஐ வி.ஆர் ப்ளே காம்போ ரூ. 9,999-ற்கு கிடைக்கும். ரெட்மி ஒய் 1 மற்றும் எம்ஐ ப்ளூடூத் ஹேட்செட் காம்போ ரூ. 8,999-ற்கு கிடைக்கும். இதுபோலவே எம்ஐ பாக்கெட் ஸ்பீக்கர் மற்றும் எம்ஐ இயர்ஃபோன் பேஸிக் காம்போ ரூ. 1,499-ற்கு கிடைக்கும். 10000 எம்.ஏ.ஹச் எம்ஐ பவர் பேங்க் 2ஐ மற்றும் எம்ஐ ரோலர்பால் பெண் காம்போ ரூ. 899-ற்கு கிடைக்கும். இந்த அனைத்து காம்போக்களும் 200 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வௌர்ம். இது தவிர, மேலும் 50 எண்ணிக்கையில் எம்ஐ ஏர் ப்யூரிஃபையர் ஃபில்டர் ரூ. 8,999-ற்கு கிடைக்கும்.

இந்த முக்கியமான ஆஃபர்களை தவிர்த்து, கூப்பன்களும் கிடைக்கும். இந்த கூப்பன்கள் ரூ. 50, ரூ. 100, ரூ. 200 மற்றும் ரூ. 500 என்கிற எண்ணிக்கையில் குறைந்தபட்சம் ரூ. 600 மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு கிடைக்கும். ஜியோமி எம்ஐ விஐபி கிளப் உறுப்பினர்களுக்கு வருடாந்திர நினைவு பரிசுகளையும், பிளாட்டினம் மற்றும் டைமண்ட் கிளாஸ் உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கும். கூடுதலாக இந்த எம்ஐ நிறைவு சேலில் எம்ஐ எக்ஸ்சேன்ஜின் மூலம் பழைய மொபைல்களுக்கு பதிலாக புதிய ஜியோமி ஸ்மார்ட்போன்கள் வாங்கிக்கொள்ளலாம். மேலும் உங்களுடைய பழைய மொபைல்களுக்கு கேஸ் மற்றும் ப்ரொடக்டர்களும் வழங்கும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com