Xiaomi தனது அடுத்த அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Xiaomi 17 Ultra-வை மூன்று கேமரா சிஸ்டத்துடன் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக லீக்
Photo Credit: Xiaomi
200MP டெலிஃபோட்டோ, 50MP மெயின் — அல்ட்ரா கிளியர் ஜூம் போட்டோஸ்
கேமரா மேட்டருக்குன்னே ஃபேமஸான Xiaomi, தன்னோட அடுத்த அல்ட்ரா சீரிஸ் மாடலான Xiaomi 17 Ultra-வை ரெடி பண்ணிட்டு இருக்கான். இந்த போன் பத்தி இப்போ வந்திருக்கிற லீக்ஸ் (Leaks) டெக் உலகத்துல பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கு. என்ன ட்விஸ்ட்ன்னா, முந்தைய Xiaomi 15 Ultra-ல குவாட் (4) கேமரா செட்டப் இருந்துச்சுல்ல? ஆனா, இப்போ வர்ற இந்த 17 Ultra-ல மூணே மூணு கேமராக்கள் தான் இருக்குமாம்! அட ஆமாங்க! எண்ணிக்கையைக் குறைச்சாலும், பவரை பல மடங்கு ஏத்திருக்கான் Xiaomi.
இந்த போனோட டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்குல்ல... அதுல தான் பெரிய மேஜிக்கே! லீக்ஸ் படி பார்த்தா, இந்த லென்ஸ் மட்டும் 200 மெகாபிக்சல் சென்சார்-உடன் வருமாம். 200MP டெலிஃபோட்டோ-ன்னா சும்மா இல்ல! நாம தூரத்துல இருக்கிற எதைப் போட்டோ எடுத்தாலும், ஜூம் பண்ணிப் பார்க்கும்போது, கொஞ்சம் கூட குவாலிட்டி குறையாமல், துல்லியமா இருக்குமாம். இந்த கேமராவுக்கு Samsung-ன் S5KHPE சென்சாரை யூஸ் பண்ணியிருக்காங்கன்னு சொல்றாங்க.
இந்த மாதிரி கேமரா செட்டப்பை வச்சிருக்கிறதுனால, Xiaomi கேமரா எண்ணிக்கையைவிட, ஒவ்வொரு சென்சாரோட ஆப்டிமைசேஷன் (Optimisation) மற்றும் ஃபோக்கல் லென்த்-ல தான் இப்போ அதிகமா கான்சென்ட்ரேட் பண்றாங்கன்னு தெரியுது.
சிப்செட் என்ன? இந்த அல்ட்ரா போனுக்கு பவர் கொடுக்க, Qualcomm-ன் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இது பெர்ஃபார்மன்ஸ்ல சும்மா அசுரத்தனமா இருக்கும். அதுமட்டுமில்லாம, இந்த போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஒரு பெரிய 2K OLED டிஸ்ப்ளே-வோட வரும்னு லீக்ஸ் சொல்லுது.
வெளியீடு எப்போ? இந்த Xiaomi 17 Ultra போன் சைனால சீக்கிரமே வந்தாலும், இந்தியாவுக்கு வர மார்ச் 2026 வரைக்கும் ஆகலாம்னு இண்டஸ்ட்ரி டிப்ஸ்டர்ஸ் சொல்றாங்க. மொத்தத்துல, கேமரா பிரியர்களுக்கு Xiaomi 17 Ultra ஒரு பெரிய விருந்தா இருக்கப் போகுது. 200MP டெலிஃபோட்டோ லென்ஸ்-ஓட பவரை சீக்கிரம் நம்ம ஃபோன்ல பார்க்கப் போறோம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
CES 2026: Asus ProArt PZ14 With Snapdragon X2 Elite SoC Launched Alongside Zenbook Duo and Zenbook A16