Photo Credit: Xiaomi
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Xiaomi 15 Pro செல்போன் பற்றி தான்.
Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகிய இரண்டு மாடல்களை உள்ளடக்கிய Xiaomi 15 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Snapdragon 8 Elite சிப்செட் மூலம் Xiaomi 15 Pro செல்போன் இயங்கும். Xiaomi 15 Pro மாடலில் 5X டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 6,100mAh பேட்டரி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு செல்போன்களின் பல அம்சங்களை Xiaomi நிறுவனத்தின் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன சமூக ஊடக தளமான Weibo தளத்தில் Xiaomi 15 Pro ஆனது 850Wh/L ஆற்றல் கொண்ட 6,100mAh பேட்டரியுடன் வரும் என கூறப்பட்டுள்ளது. Xiaomi 14 Pro செல்போனை விட இது 38 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. முந்தைய மாடலில் 4,880mAh பேட்டரி இருந்தது.
கூடுதலாக 2K மைக்ரோ-வளைந்த டிஸ்பிளே Xiaomi 15 Pro செல்போனில் பொருத்தப்பட்டிருக்கும். இது ஒளிரும் M9 மெட்டீரியலைப் பயன்படுத்துகிறது, 1.38mm பெசல்கள் மற்றும் 3,200 nits உச்ச பிரகாசம் கொண்டுள்ளது. ஒளி-உமிழும் பொருள் ஒட்டுமொத்த மின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்கும் என்று கூறப்படுகிறது. Xiaomi 15 Pro மாடல் 5X பெரிஸ்கோப் கேமராவின் 10X லாஸ்லெஸ் ஜூம் அம்சத்தை கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் உள்ள கேமரா யூனிட் மீண்டும் லைக்கா பிராண்டிங் மூலம் உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகிய இரண்டு செல்போன்களும் நிறுவனத்தின் HyperCore தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயக்கப்படும் . இது முந்தைய மாடல்களை விட 45 சதவிகித செயல்திறன் மேம்பாட்டை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மின் நுகர்வு 52 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. 2K தெளிவுத்திறனில் 11 மணிநேரத்திற்கு பெரிய அளவிலான டர்ன்-பேஸ்டு 3D கேமை விளையாடும் போதும் பேட்டரி தாக்குபிடிக்கிறது. Xiaomi 15 செல்போன் சீரியஸ் 42.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை தாங்கும். வினாடிக்கு 59.4 பிரேம்கள் (fps) என்ற பிரேம் வீதத்தை கொண்டுள்ளது.
இது மொபைல் நோட்டிபிகேஷன், கிளாக், மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், போன்ற ஆதரவை வழங்குகிறது. இது 6280mAh பேட்டரி உடன் 33W-பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இன்னும் ஏராளமான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இந்த ஸ்மார்ட்போன் 2TB வரையிலான எக்ஸ்டர்னல் மெமரியை வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்