Mi 10S Pro அல்லது Mi CC10 Pro இந்த 144 மெகாபிக்சல் கேமரா போனாக இருக்கலாம் என்று வதந்தி பரவியுள்ளது.
Xiaomi Mi Note 10, 108 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது
ஷாவ்மி நிறுவனம் அதன் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரு தனித்துவமான அம்சங்களைக் கொண்டுவருகிறது. சமீப காலமாக, உயர் மெகாபிக்சல் பட சென்சார்கள் கொண்ட போனை அறிமுகம் செய்வதில் ஷாவ்மி முன்னோடியாக இருக்கிறது. அதற்கு எடுத்துகாட்டாக, Xiaomi Mi Note 10, 108 மெகாபிக்சல் கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 108 மெகாபிக்சல் ஷூட்டருடன் Xiaomi எம்ஐ 10 ப்ரோவை அறிமுகப்படுத்தியது.
அதைத் தொடந்து, தற்போது 144 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட போனில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mi 10S Pro அல்லது Mi CC10 Pro இந்த 144 மெகாபிக்சல் கேமரா போனாக இருக்கலாம் என்று வதந்தி பரவியுள்ளது.
“ஷாவ்மி 144MP கேமரா சென்சார் கொண்ட போனில் பணிபுரிகிறது. இது Mi 10S Pro அல்லது Mi CC10 Pro ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று டிப்ஸ்டர் சுதான்ஷூ ட்வீட் செய்தார்.
Mi 10 Pro மற்றும் Mi CC9 Pro ஆகிய இரண்டு போன்களும் 108 மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டுள்ளன. அதனால்தான் Mi 10S Pro மற்றும் Mi CC10 Pro ஆகியவை இன்னும் அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராவைக் கொண்டுவரும். அதிக மெகாபிக்சல் சென்சார்களைச் சேர்க்காமல் ஆப்பிள் மற்றும் கூகுள் தொடர்ந்து சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals