ஐபோனிற்கான வாட்ஸ்ஆப், சிறி மூலம் குரூப் மெசேஜ் அனுப்புகின்ற வசதிகளோடு புதிய வெர்ஷன் 2.18.80 அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது 2016 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப்பினுள் சிறி ஒருங்கிணைப்பு வசதியை விரிவுபடுத்தியுள்ளது, இதற்கு முந்தைய வெர்ஷனில் வாய்ஸ் கமன்ட் மூலம் தனிப்பட்ட மெசேஜ் அனுப்புகின்ற வசதி இருந்தது. இந்த குரூப் மெசேஜ் அப்டேட் உடன் புகைப்படங்கள் மற்றும் ஜிஃப்களை அறிவிப்பு பேனரிலே காணுகின்ற வசதியும் இருக்கிறது. இதன் மூலம் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாமலே வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் ஜிஃப்களை அறிவிப்பு பேனரில் காண முடியும்.
இந்த சமீபத்திய அப்டேட் உடன், ஐபோனிற்கான வாட்ஸஆப் சிறி மூலம் வாட்ஸ்ஆப் குரூப்களுக்கு மெசேஜ் அனுப்புகின்ற வசதியை அளிக்கிறது. நீங்கள் செயலிக்கு சென்று மெசேஜை தட்டச்சு செய்ய இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் உங்களுடைய வாய்ஸ் கமேன்டின் மூலம் ஏதாவது ஒரு குரூப்பிற்கு முக்கியமான தகவல்களை அனுப்ப முடியும். இது செப்டம்பர் 2016 அறிமுகப்படுத்தப்பட்ட சிறி ஒருங்கிணைப்பில் வந்துள்ளது.
சிறி பயன்படுத்தி குரூப் மெசேஜ் அனுப்ப "ஹே சிறி" கமேண்ட் கொடுத்தும், ஹோம் பட்டனை அழுத்திப்பிடித்தும் சிறிக்கு சென்று, "சென்ட் எ மெசேஜ் டு வாட்ஸ்ஆப் குரூப் [அந்த குரூப்பின் பெயர்]" என ஆங்கிலத்தில் கேட்டால், சிறி உள்ள குரூப்களின் பட்டியலை காண்பிக்கும். பல குரூப்கள் ஒரே பெயரில் இருந்தால் அதில் சரியான குரூப்பை தேர்வு செய்தல் வேண்டும், பின்னர் அனுப்ப வேண்டிய தகவலை கூறி, சம்பந்தப்பட்ட குரூப்பிற்கு அனுப்பச் சொல்ல வேண்டும்.
சிறி மூலம் குரூப் மெசேஜ் அனுப்பும் இந்த வசதியோடு சேர்த்து, ஐபோனிற்கான வாட்ஸ்ஆப் அறிவிப்பு பேனரிலே புகைப்படங்கள் மற்றும் ஜிஃப்கள் காணும் வசதியும் இருக்கிறது என வாட்ஸ்ஆப் பேட்டா தெரிவித்துள்ளது. மேலும் பயனர்கள், வாட்ஸ்ஆப்பில் புகைப்படங்களை தானாக பதிவிறக்கம் செய்யும் விருப்பத்தை தேர்வு செய்திருந்தால் நேரடியாக அதை பதிவிறக்கம் செய்கிற வசதியும் கிடைக்கும். மேலும் பயனர்கள் ஐபோன்6ல் உள்ள 'பீக் அண்ட் பாப்' வசதியை பயன்படுத்தியும், அறிவிப்பு பகுதியை ஸ்வைபி செய்தும் காண முடியும். இந்த அம்சம் ஐஓஎஸ் 10 அல்லது அதற்கும் புதிய வெர்ஷனில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சங்கள் எங்களுடைய ஐஓஎஸ் சாதனங்களில் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை, ஒருவேலை சர்வர்-சைட் ஸ்விட்க்காகக் கூட இருக்கலாம்.
இந்த அப்டேட் செய்யப்பட வாட்ஸ்ஆப் ஆப்பிள் ஆப் ஸ்டார் மூலம் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கிறது. இது ஐஓஎஸ் 7.0 அல்லது அதற்கும் மேற்பட்ட இயங்குதளங்களில் செயல்படுகிற சாதனங்களில் கிடைக்கும். இது 166.3 எம்பி அளவில் இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்