1,598 யுவான்கள் (சுமார் 16,000 ருபாய்) என்ற விலையில் 'விவோ Z5' அறிமுகமாகியுள்ளது
கடந்த புதன்கிழமையன்று, சீனாவில் விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான 'விவோ Z5' அறிமுகப்படுத்தியது. 19.5:9 திரை விகிதம், வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது இந்த 'விவோ Z5'. 8GB வரையில் RAM அளவுகளைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் நைட் வியூ 2.0+ கேமரா தரத்துடன் அறிமுகமாகியுள்ளது. சிறந்த கேமிங் அனுபவத்தை அளிக்க, இந்த ஸ்மார்ட்போன் 'மல்டி-டர்போ' வசதியை கொண்டுள்ளது.
'விவோ Z5': விலை!
சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், நான்கு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போன் 1,598 யுவான்கள் (சுமார் 16,000 ருபாய்) என்ற விலையிலும், 6GB RAM + 128GB அளவு ஸ்மார்ட்போன் 1,898 யுவான்கள் (சுமார் 19,000 ருபாய்) என்ற விலையிலும், 6GB RAM + 256GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போன் 1,998 யுவான்கள் (சுமார் 20,000 ருபாய்) என்ற விலையிலும், 8GB RAM + 128GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போன் 2,298 யுவான்கள் (சுமார் 23,000 ருபாய்) என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.
இவற்றில் 8GB RAM + 128GB சேமிப்பு அளவு வகையை தவிற அனைத்து வகை 'விவோ Z5' ஸ்மார்ட்போன்களும் சீனாவில் விற்பனையில் உள்ளது.
'விவோ Z5': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போ ன் ஃபன்டச் OS 9.1, ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு ஆகியவற்றை கொண்டு செயல்படுகிறது. 6.38-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது.
மூன்று பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4G VoLTE, வை-பை, ப்ளூடூத், GPS, மைக்ரோ-USB, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
4,500mAh அளவிலான பேட்டரியை கொண்ட இந்த 'விவோ Z5' ஸ்மார்ட்போனிற்கு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. 159.53x75.23x8.13mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்