Vivo Z1x: 48 மெகாபிக்சல் சென்சார், 3 பின்புற கேமராவுடன் அறிமுகம், விற்பனை எப்போது?

விளம்பரம்
Written by Abhinav Lal மேம்படுத்தப்பட்டது: 6 செப்டம்பர் 2019 15:25 IST
ஹைலைட்ஸ்
  • Vivo Z1x ஸ்மார்ட்போன் செப்டம்பர் 13-ல் விற்பனைக்கு வரவுள்ளது
  • Vivo Z1x 6.38-இன்ச் full-HD+ AMOLED திரையை கொண்டுள்ளது
  • 6GB RAM வகையில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது

Vivo Z1x ஸ்மார்ட்போன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது.

Vivo Z1x இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Z5 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக தெரிகிறது. Vivo Z1x ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் 48 மெகாபிக்சல் சென்சாருடன் 3 பின்புற கேமரா அமைப்பு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும்  இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவை ஆகும். இந்தியாவில் Vivo Z1x விலை, வெளியீட்டு தேதி, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சலுகைகள் போன்ற வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் உள்ளே...

Vivo Z1x: இந்திய விலை, விற்பனை சலுகைகள்!

இந்தியாவில் இன்று அறிமுகமான Vivo Z1x ஸ்மார்ட்போன்களில் 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு வகை 16,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றும் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு வகை 18,990 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. விவோ நிறுவனம் 8GB RAM வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Fusion Blue) மற்றும் ஊதா (Phantom Purple) என்ற இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo Z1x விற்பனை சலுகைகளாக  எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 1,250 தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் 6,000 ரூபாய் வரை சலுகைகளை வழங்கவுள்ளது. 6 மாதங்கள் வரை கட்டணமில்லாத ஈ.எம்.ஐ.களும் இந்த ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.

Vivo Z1x: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 9.1-ஐ மையப்படுத்தி ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. சூப்பர் AMOLED திரை மற்றும் வாட்டர்-ட்ராப் நாட்ச் ஆகிய அம்சங்களுடன் 6.38-இன்ச் full-HD+ (1080x2 340 பிக்சல்கள்) திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Vivo Z1x ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

கேமராக்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் 120 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
 

இந்த ஸ்மார்ட்போன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், USB டைப்-C போர்ட், GPS, மற்றும் 4G LTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Great battery life
  • Rapid fast charging
  • Bad
  • Large and bulky
  • Poor night mode
  • Funtouch OS needs refinement
  • No expandable storage
 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo Z1x, Vivo Z1x Price in India, Vivo Z1x Specifications, Flipkart, Vivo India
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.