Vivo Z1 Pro இப்போது இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. தொலைப்பேசியின் மூன்று வகைகளின் விலைகளும் ரூ. 2,000. குறைக்கப்படுள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் இந்த தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Vivo Z1 Pro-வின் விலை:
விலைக்குறைப்புக்குப் பிறகு, இந்தியாவில் Vivo Z1 Pro-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 13,990 ஆகும். அதேபோன்று, 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 14,990-யாக உள்ளது. மேலும், top-end 6GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 15,990-யாக உள்ளது. 4GB RAM ஆப்ஷன் ரூ. 1,000 விலைக்குறைப்பை பெறுவதோடு, 6GB RAM ஆப்ஷன்கள் கொண்ட இரண்டு வகைகளும் ரூ. 2,000 விலைக்குறைப்பைப் பெறுகின்றன. அந்த மூன்று வகைகளும் Mirror Black, Sonic Black மற்றும் Sonic Blue ஆகிய நிரங்களில் கிடைக்கின்றன. புதிய விலைகள் இப்போது Flipkart மற்றும் Vivo India E-Store-ல் பிரதிபலிக்கின்றன.
6 மாதங்கள் வரை no-cost EMI, எக்ஸ்சேஞ் தள்ளுபடி, Axis Bank Buzz கிரெடிட் கார்டுடன் 10 சதவீத தள்ளுபடி மற்றும் பல சலுகைகள் VIvo Z1 Pro-வில் உள்ளன.
Vivo Z1 Pro-வின் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Vivo Z1 Pro, Android Pie அடிப்படையிலான Funtouch OS 9-ல் இயங்குகிறது. 9.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. Adreno 616 GPU மற்றும் 6GB of RAM வரை இணைக்கப்பட்டு octa-core Snapdragon 712 SoC-யால் இயக்கப்படுகிறது. சேமிப்பிடத்தைப் பொறுத்தவரை, 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனை Vivo Z1 Pro வழங்குகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo Z1 Pro-வில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் f/1.78 lens உடன் 16-megapixel முதன்மை சென்சார், 120-degree super wide-angle f/2.2 lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel மூன்றாம் நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதனுடன் 32-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது.
Vivo Z1 Pro, 18W fast சார்ஜிங் ஆதவுடன் 5,000mAh பேட்டரியை பேட் செய்கிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, OTG உடன் USB 2.0 மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். மேலும், சாதனத்தின் பின்புறத்தில் fingerprint sensor உள்ளது. Vivo Z1 Pro, 162.39x77.33x8.85mm அளவீடையும், 210 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்